பதவி படுத்தும் பாடு - மு. பழனியப்பன்

Photo by engin akyurt on Unsplash

மு. பழனியப்பன்!
மேலே!
ஒரு நாற்காலி¢ இருக்கிறது!
அது பரம சக்தி வாய்ந்தது!
இந்த நினைப்பில்¢ அதில் அமர்ந்தவர்!
முதலாளியாகிறார்!
அவர் அன்று முதல் பொன் கரண்டியில்!
உணவு அருந்துவதாக!
எண்ணம்!
உடையில் மாற்றம்!
என்றைக்கோ தைத்த!
வெள்ளை நாகரீக ஆடை எல்லாம்!
இன்றைக்குத் தூசி தட்டப் பட்டது!
புளிமூட்டை கணக்காய்!
ஆடைக்குள் சரீரம்!
வரும் வண்டி மாறுகிறது!
எல்லாம் தலைகீழ்!
அதுவரை!
உடன் பணிபுரிந்தவர்கள்!
அடிமைகளாகிறார்கள்!
அவர்களுக்கு சுயசிந்தனை!
இருக்கக் கூடாது!
பேசக்கூடாது!
எது செய்தாலும்!
அவருக்கு எதிரானதாக!
அது இருக்கலாம்!
பக்கத்தில் இரு பெண்!
கைவிசிறிகள்!
அவர்களுக்குக் கை வலிக்கிறதோ!
இல்லையோ!
வீசிவிடும் செய்திகளுக்கு!
வலிக்கிறது!
நரம்பு!
இப்படிப் பதவி ஆசைக்கு!
பரிதவிக்கும்!
பண்டிதர்களுக்கு!
உலகம் அவர்களுடையதாய் இருப்பதாய்!
எண்ணம்!
பதவிகள்!
பிறர் மரியாதையை!
ருசிபார்க்கின்றன!
அதன் விளைவு!
போகப் போகப் புரியும்!
பதவிகள் சற்றுநேர!
காய்ச்சல்!
அதற்கு மருத்துவர்கள் தேவை!
மீறிப் போனால்!
உயிரற்ற நாற்காலி கௌரவம்!
எத்தனை நாளைக்கு!
-- !
M.Palaniappan
மு. பழனியப்பன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.