நான், எனது மகள் - கவிதா. நோர்வே

Photo by Julian Wirth on Unsplash

அவர்கள் இவர்கள் என்று!
எல்லாருமாய்!
உருவகித்த என்னில் !
இப்பபொழுதெல்லாம்!
தேடிக்கொண்டிருக்கிறேன்.....!
எங்கேயாவது!
மிச்சம் இருக்கிறதா!
நான்?!
மிஞ்சிக் கிடக்கும்!
என்னில் துளிர்விடும்!
மகள் !
நாளை தேடமாட்டாள் !
அவளை !
அவளுக்குரிய வட்டங்கள்!
போடப்படட்டும்!
அவளது கைகளால்!
காத்திருக்கிறேன்!
நம்பிக்கையோடு !
அவளுக்குக் கொடுக்க!
என்று!!
!
- கவிதா நோர்வே
கவிதா. நோர்வே

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.