01.!
விழிச்சிறை!
------------!
உன் தூண்டில் பார்வையில்!
என்னை சிக்க வைத்தாய்!
குற்றமென்று!
என் விழிச் சிறையில்!
உன்னை சிறை வைத்தேன்!
சிறை உன்னை!
மாயக் கள்வன் ஆக்கியதோ!!!!
சிறையில் இருந்தபடியே!
கைப்பற்றி விட்டாயே!
என் இதய சிம்மாசனத்தை!...!
02.!
நிழல் !
-------!
பிறந்தது முதல்!
மண்ணில் புதையுரும் வரை!
என்னுடன் இருப்பது!
நீ மட்டுமே!
ஒளியின் பிரகாசத்தில்!
என் பின் மறைந்து!
இருளின் குளுமையில்!
அதனுடன் ஒன்றாகி கலந்து!
கதிரவன் தோன்றி மறையும்!
காலத்துகிடையே!
வளர்ந்து தேய்ந்து வளரும் நீ!
என்னுடன் ஒட்டிப் பிறந்த!
என் இரட்டைப் பிறவியே....!
- பிரதீபா,புதுச்சேரி. !
!
03. !
நட்சத்திரம்!
-----------!
வான வீதியில் பகலெல்லாம்!
மேகங்களுக்கு இடையே!
தென்றலுடன் !
துள்ளி குதித்தாடிய!
வான் மகள்!
உலாவிய இடத்தில் இருந்து!
வழித் தவறாதிருக்க!
அவள் ஆடையிலிருந்து!
சிதறிய முத்துக்கள்!
இரவில் அவளுக்கு வழிகாட்டும்!
நட்சத்திரங்களாய் மின்னுகின்றனவோ
பிரதீபா,புதுச்சேரி