ஏதோ ஒரு இறுக்கம்...!
கதறி அழத் தோன்றும் துக்கம்!
யாருமே இல்லை போன்றதொரு ஏக்கம்......!
இசையில் கரைக்க முயல்கிறேன்!
வென்றது என்னை!
புத்தகத்தில் மறக்க நினைக்கிறேன்!
புதைத்தது என்னை!
தூக்கத்தில் கூட விடுவதில்லை!
கனவாக மிரட்டல்!
அடிக்கடி அடிவயிற்றை!
அழுத்தும் சோகம்!
என்ன செய்தாலும் எதுவோ !
என்னை தொல்லை செய்கிறது!
எங்கு சென்றாலும் நிழல்சுமையாய்!
தலையில் இறங்கும் பாரம்!
அழ வைப்பதா உன் நோக்கம் ??!
இதில் மட்டும் தோற்று விடுவாய் என்னிடம்!
கண்ணீர் சுரப்பிகள் !
வேலைப் பளு மிகுதியால்!
பழுதாகி கட்டாய ஒய்வெடுத்துச் !
சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது!
இன்றோடு ஒரு முடிவு செய்தே தீருவது !
என்ற தீர்மானத்துடன்!
என்னுள் வலை வீசுகிறேன்..!
எத்தனையோ குப்பைகளுக்கு மத்தியில்!
அழிந்தே விட்டது என்று நான்!
நம்பத் துணிந்த என் ”சுயம்”!
எங்கோ ஒட்டிக் கொண்ட மிச்சத்தின் துகளாய்!
ஏக்கப் பார்வை பார்க்கிறது என்னை
சுடர்விழி