பரிதவிப்பு .. எச்சரிக்கை
கல்முனையான்
பரிதவிப்பு .. எச்சரிக்கை !
01.!
பரிதவிப்பு !
---------------!
காமத்தின் ருசி அறியா காரிகையை!
கல்யாணம் என்று சொல்லி அவசரமாய் மணமுடித்து!
அஞ்சாறு நாளிலேயே அமெரிக்கா!
போய்விட்டான் ஆறாத வடுவுடனே !
அவனுக்கும் அவளுக்கும் இப்போது!
தொலை பேசியில்தான் தாம்பத்யம்!
காலை எழுந்தவுடன் உள் வீட்டு கூரை பார்த்து!
ஏக்கத்துடன் பெரு மூச்சில் இவள். !
சாப்பிட மனமில்லை எதற்கு சமைக்க!
அவள் உள் மனம் பேசுகிறது!
சும்மா இருந்த சங்கை ஊதிவிட்டான் ஆசாமி!
ரெண்டு வருஷம் காத்திருக்கணுமே... !
வெளியிலே சிரித்துக் கொண்டு!
உள்ளுக்குள் அழுகிறாள் இம் மாது!
இவளின் உணர்வுகளை எங்கோ சாக்குப்பையினுள்!
ஒளித்துவிட்டு ஒட்டடை அடிக்கிறாள் வீட்டுக்கு.. !
பாவம் அவள் பரிதாபம் அவள் உணர்வுகள்!
சந்தோசம்,அன்பு,பாசம் எல்லாமே!
வெறும் நான்கு சுவருக்குள்ளே!
நர்த்தனம் ஆடுகிறது நிர்வானத்துடன்...!
!
02.!
எச்சரிக்கை !
----------------!
கண்ணிலே கருணையும்!
வாயிலே அன்பையும் கொண்டு!
இதயத்தை பரிமாறவென்று!
ஒரு கூட்டம் புறப்பட்டு விட்டது... !
கவனமாய் இருங்கள்...!
உங்கள் இதயத்தையும் வாடகைக்கு!
வாங்குவதற்கு வரலாம்!
சொல்லி அனுப்புங்கள் அவர்களை!
இங்கே இதயம் இத்துப் போய்விட்டது என்று.. !
சில வேளை சிரிப்பார்கள் அவர்கள்!
உங்களை நல்லவர் என்பார்கள்!
நீங்கள் ஏழு கொலைகள் செய்திருந்தாலும்..!
நம்பாதீர்கள் அவர்களை!
உங்களை தின்று உணர்வுகளை துப்பி விடுவார்கள். !
உங்கள் இதய அறைகளில்!
பன்னீர் நிறப்புவார்கள் முழுமையாக!
ஆறேழு மாதங்களின் பின்!
அவைகள் வற்றிவிடும் அந்த!
முரண்பாடுகள் என்ற வெப்பத்தால்.. !
ஆதலினால் அன்பானவர்களே!
வேண்டாம் என்று சொல்லுங்கள்!
உங்கள் இதயத்தை கொடுக்காதீர்கள்!
கொடுத்து விட்டால் கெடுத்துவிடும்!
உங்கள் மூளையை ஹா ஹா என்னைப்போல்