கடவுளை நீ ?!
----------------------!
நானுழுத நிலத்தை!
உனதென்றாய்!
எனது வீட்டை!
உனதென்றாய்!
நான் மிதித்த தெருவை!
உனதென்றாய்!
பொது மண்டபங்கள்!
நூலகம்!
யாவும்!
உனதாழுமை என்றாய்!
மீதமிருந்த!
ஆலயத்தை!
அழித்தாய்!
எனது இருப்பை!
எனது வாழ்வை!
நிர்மூலமாக்கும் உன்னை!
அழிக்க நினைத்தேன்!
உற்றதுணையென!
எனக்கிருந்த!
மாட்டை அனுப்பினேன்!
உனைச் சிதைக்க…!
மாடோ உனக்கு!
சேவகம் செய்தது!
நானனுப்பிய மாடு!
என்னையே!
கொல்ல முனைந்தது.!
வேறு வழியின்றி!
நானே உன்னைக்!
கொல்ல விளைந்தேன்!
நீதிஇ நியாயம்!
நான் படித்த புத்தகங்கள்!
எல்லாவற்றுக்கும் மேல்!
எனது மாட்டுக்கே!
நான் அஞ்சினேன்.!
கடவுளின் ஆசீர்வாதம் வேண்டி!
நான் சென்றபோது!
கடவுளை நீ!
ஆசீர்வதிக்க கண்டேன்

அழ. பகீரதன்