என் காதலி வருவது போல் - வி. பிச்சுமணி

Photo by Paweł Czerwiński on Unsplash

மறியல் செய்யும்!
மாற்று கட்சியினரை!
காலையில் கைது செய்து!
மாலையில் விடுவிப்பது போல்!
பரிதியை பகல் எல்லாம்!
பிடித்து வைத்து கொண்டு!
மாலையில் விடுவித்தது !
மழை மேக மூட்டம் !
வானம் வெள்ளைஒளி!
லிட்மஸ் தாளை!
மழையில் முக்கியது!
கிழக்கே அது வானவில்லானது!
நிலா வானவில்லை!
வண்ண பென்சில் பெட்டிஎன மருவி!
வண்ணம் கேட்டு அழுதது !
அதன் கண்ணீரில் கடல் உருவாயிற்று !
ஞாயிறு சிவப்பு வண்ணம்!
எடுத்து கொண்டு!
மஞ்சள் வண்ணத்தை!
நிலவுக்கு கொடுத்தது!
சிதறிய சிவப்பு வண்ணங்கள்!
செல்போன் கோபுர சிவப்பு விளக்கானது!
சிதறிய மஞ்சள் வண்ணங்கள்!
தெருவெங்கும் சோடியம் விளக்கானது !
மஞ்சள் முழுநிலா!
நட்சத்திர கூட்டத்தில் வருவது!
மின்மின்மினி பூச்சி அலையும்!
ஒற்றை அடி பாதையில்!
என் காதலி வருவது போல்!
மகிழ்ச்சி உருவாக்கியது !
வி. பிச்சுமணி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.