பரண் மேல் பழைய நினைவுகள்!
பரண் மேல்!
பழைய நினைவுகள்!
பூட்டப்பட்ட ஒரு பெட்டி...!
பிறந்த நாள் அன்பளிப்பு !
பெற்றோரிடமிருந்து மறைத்து வைத்த!
பரிட்சைத்தாள்!
தபால் பெட்டி வரை செல்ல!
தகுதி இல்லாமல்!
பெட்டிக்குள் தூங்கிப்போன கடிதங்கள் !
எல்லாம் விழித்துக் கொண்டு!
எந்தன் துயில் கெடுக்கும்!
தீபாவளிக்கோ!
பொங்கலுக்கோ!
வீட்டை தூசி தட்டுகையில்!
-- வீ.கார்த்திகேயன்!
மயிலிறகு!
மயிலிறகு குட்டி போடுமென்று!
மறைத்து வைத்தேன் !
நோட்டு புத்தகத்தில்...!
மறந்து போனேன்!
வருடங்கள் உருண்டன!
தூசி தட்டி பிரித்தபோது!
குட்டி போட்டிருந்தது!
மயிலிறகல்ல !
மறக்க முடியாத என் நினைவுகள் !
-- வீ.கார்த்திகேயன்
வீ.கார்த்திகேயன்