அம்மா! அம்மா! அம்மா
தமிழ் ராஜா
ரத்தத்தில் நனைந்து வந்த!
என்னை முத்தத்தால் நனைத்த !
உன் இதழ்களில்!
முதல் முறை என் பெயரை!
எப்பொழுது உச்சரித்தாயோ!
அன்றிலிருந்து இன்று வரை !
அந்த குரலில் கலந்து வரும்!
உரிமையை உணர் வை !
வேறு எந்த குரலிலும் !
நான் உணர்ந்ததில்லை!
உன் விரல் பட்ட உணவில்!
தான் நான் உயிர் வளர்த்தேன்!
உன் இதழ் சிந்திய வார்த்தையை!
உச்சரித்துத் தான் மொழி பழகினேன்!
உன் சுவாசத்தில் கலந்த காற்றை !
சுவாசித்து தான் வாழ்ந்திருக்கேன்!
முதல் நடந்திடும் நான் !
விழுந்தது உன் மடியில்!
முதல் மொழியினை நான்!
உணர்ந்தது உன் இதழில்!
முதல் கலங்கிடும் விழிகளை!
துடைத்தது உன் உடையில்!
முதல் சிரிப்பினை பழகியது!
உன் முகத்தில் !
கண்ணாடிப் பார்க்கும் வரை!
என் அத்தனை முகங்களும் நீயே !
உன் முன்னாடி இருப்பதை விட!
வேறு இன்பமில்லை தாயே!
என் நிர்வானத்தை முதலில்!
களைத்த நீயே!
நீல வானத்தையும் காட்டி!
வளர்த்தாய் தாயே!
மூச்சு விடும் இடைவெளியிலும் !
உன் அன்பு எனை !
விட்டு விலகியதில்லை!
நீ காட்டி வளர்த்த !
ஒவ்வொரு பொருளும்!
இனி வேறெங்கும் காண்பதற்கில்லை!
கையெடுத்து நீ கும்பிடச் !
சொன்ன தெய்வமோ !
எனக்கு தலை சீவிவிட்டதில்லை!
நானும் பொய்யுரைத்தப் பொழுதும் !
கூட நீ எனை அடித்ததில்லையே!
குளிப்பாட்டி விடும் உன் கைகளில் !
அடி வாங்கஅடம் பிடிப்பேன்!
உன்னிடம் அடி வாங்காமல் !
உன்னன்பின் ஆழம் புரிவதில்லை!
என்பேன்!
கிறுக்கித் தான் அம்மா!
உன் கைகளை பிடித்து!
எழுத துவங்கினேன் !
அன்பை சுருக்கி வாழும்!
இதயங்களின் நடுவே!
உறவுகளை பெருக்கி வாழும் !
உன்னுடைய நேசத்தில் நெகிழ்ந்தேன்!
அணுஅணுவாய் என் வளர்ச்சியை!
ரசிப்பாய் ஒரு கைப்பிடி சோறு!
குறைந்தாலும் உள்ளம் துடிப்பாய் !
என்றைக்கும் உன் சேலை நுனி தான் !
என்னுடைய கை குட்டை !
உன் முகமே நான் முகம் பார்த்து !
தலை சீவும் கண்ணாடி!
உன் வாயில் புத்திசாலி என்று கேட்பதை!
விட முட்டாள் என்று செல்லமாக கேட்பதையே !
நான் விரும்புகிறேன் தாயே!
சட்டை பையில் கை விடும் பொழுதெல்லாம் !
எனக்கு தெரியாமல் நீ !
வைத்த ஒரு ரூபா தலை நீட்டும் !
அந்த சுகம் இன்று எந்த !
ஆயிரம் லட்சங்களிலும் கிடைப்பதில்லை!
உன் விரல் நுனியின் சுவையை !
எந்த நட்சத்திர ஹோட்டலிலும் !
உணர்ந்ததில்லை!
உன் மடியின் சுகத்தை எந்த !
பஞ்சு மெத்தையும் தந்ததில்லை ......... அம்மா! !
சத்தியமாய் உன்னை போல் ஒரு பிரிவை!
இனி வேறு ஒருவரும் தரப் போவதில்லை!
தமிழ் ராஜா