01.!
இனியும் பொழியேன்!
---------------------------!
கத்தி முனையில் நடப்பதாகவும்!
நொறுங்கும் மெலிதான!
கண்ணாடி இருக்கையில் அமர்வதானதுமான!
நுண்ணிதானங்களோடும் எச்சரிக்கையோடும்!
அலுவலகத்தில் வேணுமென்றால்!
தொடர்பாடலாம்.!
ஆனாலும் உன்னோடுமா..?!
பகலவன் வெம்மையில்!
படியிறக்கங் காணுமொரு பொலித்தீனாய்!
தினந்தினம் வெம்பி வெளுக்கிறதென் மென்மனசு!
உன் தொடர்புறக்கணிப்புகளால்.!
இன்னமும் எத்தனை தடவைகள்தான்!
தன்மானத்தைப் பிணை தருவது?!
என் நிஜ நேசிப்புகளை உனக்குள்ளுணர்த்திட.!
புரிந்து கொள்ளப்படாமலேயே கழிந்துபோன!
இறுதிக்கணங்களில்கூட!
ஒரு வேகஉந்துருளி உதைத்தெறிந்த தெருநாயாய்!
காயங்களின் அனுக்கங்களோடே!
மீளத் திரும்புகிறதென் பிரியங்கள்!
அவமானங்களைச் சொட்டியபடி.!
முன்னைய தடவையும் போலல்லாது!
முடிவு கொள்கிறது மனசு மிகவுமாய்…!
இனியும் பொழியேனென் கிரணங்களை!
வெறுமனேயும்!
இனி!
ஒரு உலர் காட்டில் பரவும்!
பெருந்தீயின் அதிவேகங்களோடே!
புசுபுசுவெனவே துளிர்த்துப் போகட்டுமென்!
பசியவனம்;!
இப்பிரபஞ்சமும் தாண்டியே…!
!
02.!
அரூபமானவன்!
--------------------!
அதீத முயல்வுகளினூடே சுபமாய் முடிவடைவதான!
மிகச்சில நிகழ்வுகளிலும்கூட அரூபமாயெனை!
எதிரீடு செய்யும் கிளைத்து நீண்ட!
கோரநகங்கள் சூடிய பெயரறியாச் சில ஊணுண்ணிகள்.!
வென்றுவிட வேண்டுமே யென்ற பதகளிப்போடு!
வெளியிலே என்றைக்குமே ஓயாத ஆட்டந்தான் அவைகளோடு.!
ஒவ்வோர் தடவையும் அவைகளே வென்றுவென்று!
மிக அகங்காரமாய் தம்துர்க்கரங்களை!
உயர்த்தி உயர்த்தி எம்பியபடியே கூக்குரலிட!
நானோ எப்போதுமே துவண்டு வீழ்வேன் களத்திலேயே.!
நிலம் புதைந்த நீர்க்குழாய்ப் பின்னலிலே!
எங்கோ ஓர் சிறு வெடிப்பு அரூபமாகவே.!
நானறியாமலே நீர் பொசிந்து பொசிந்து!
மண்ணுறிஞ்சிட, உச்சத்திலே இருத்திய!
நிறை கொள்கலனோ காலியாகிற்று!
சப்தமின்றியே.!
நான் சாய்ந்து விடக்கூடாதென்றா!
சட்டென உள்ளிழுத்துக் கொண்டாயுன் தோள்களை.!
என்றைக்கும் என்றைக்கும் போலவே!
என் தொழுகைப்பாய் மட்டுமே!
அளவீடு செய்திற்றென் கண்ணீரின் உப்புச்செறிவை.!
நீ மட்டுமேன் மௌனமாகவே இருக்கிறாய்?!
புலனறியா நிலமிருந்துங் கூட எனைப் பொசுக்கும்!
முரண்கள் நெருக்கீடுகள் போலவே!
நீயுங்கூட அரூபமானவன் என்பதனாலா?
கிண்ணியா பாயிஸா அலி