அவள் விபச்சாரி..எனது நண்பன் இல்லாமல் !
------------------------------------------------------------------!
01. !
அவள் விபச்சாரி எனப்படுகிறாள்!
-------------------------------------------------!
இரவு மிகவும் குளிர்ந்து போயிருந்ததில்!
ஒதுங்குவதில் அவையிரண்டும்!
அவசரப்பட்டிருக்க வேண்டும்.!
அவள் மிகவும் கலைந்தும்!
அவன் மிகவும் களைத்தும்!
காணப்பட்டதிலிருந்து!
ஊகிக்க முடிந்தது இதை...!
காலை வேகமாக பனிக்குளிப்பு முடிந்து!
சூரியனை உடுத்தத் தொடங்கும் போதே!
அவை தம்மை விடுவித்துக் கொண்டன!
மேக அதி நே!
தவ சீயக் தென்ட என்பதே!
புணர்வின் இறுதியின் பின் அவள்!
தொடங்கிய முனகலாயிருந்தது!
ஒன்றுமே தெரியாதது போல!
ஒன்றுமே நடவாதது போல!
சிங்களமே தெரியாதது போல!
அவன் நடந்து போனான்!
கெரி வேசிகே புதா!
ரேயட ஒயா என்ட!
மங் பலாகன்னம்!
என்ற படி!
நேற்றுக் குளித்த பின்!
எடுத்து வைத்த!
சிரிப்பை உதட்டிலிருந்தும்!
பூவைத்தலையிலிருந்தும்!
களற்றி வைத்து விட்டு!
பொதுக்கிணற்றுப்பக்கம் போனாள்!
இரவைக்கு முன்பதாக!
மீண்டும்!
தொற்றுநீக்கிக் கொள்ளவென..!
02.!
எனது நண்பன் இல்லாமல் போய்விட்ட பின்னிருந்து..!
--------------------------------------------------------------------------!
ஏற்கவே முடியாத!
பிரிவின் துயரமொன்றை!
ஒரு பெரும் மலைப்பாம்பு போல!
என்னில் சுமத்துவதாகவே!
அவனது பயணம் எனக்குள்!
இறுகியிருக்கிறது இன்னும்.!
தூக்கியெடுக்கவே முடியாத!
ஒரு கலர் நிழல் போலதான்!
என் அன்றாடத்தின் ஒவ்வொரு அசைவோடும்!
அவன் படிந்திருந்தான்!
அவனின் சிகரத்தின் மேல் நானும்!
எனதின் மேல் அவனுமாக!
ஏறியிருந்து கதைப்பதை வாய்பார்ப்பதில்!
அலைகளுக்குத்தான் என்ன கொள்ளை விருப்பம்..!
இப்படியாயிருந்தவனின்!
வெற்றிடத்தின் ஆழத்துக்குள் தான்!
அந்த மலைப்பாம்பு!
என் எலும்புகள் நொறுங்குமாறு!
இறுக்கி நோவடிக்கிறது!
அவன் இல்லாததைக்!
குத்திக்காட்ட வரும் காற்றின் உராஞ்சுதலில்!
பாதியில் நின்று போகும் பெருமூச்சும்,!
பெருஞ் சத்தமாய் வெடித்து அழச்சொல்லும்!
வெப்புசாரமுமாய்!
என் மனம் பிய்ந்து போகும்!
ஆனாலும்!
கொஞ்சமும் இரக்கமில்லை!
இந்தக் காற்றுக்கு..!
அவன் இருக்கிறான் என்பது பற்றியோ,!
அவனாகத்தான் இருக்கிறான் என்பது பற்றியோ,!
அவனின் ஞாபகங்களில் நான் வருவது பற்றியோ,!
எதையுமே இப்போது!
கொண்டு வருவதை நிறுத்திற்று!
கடல் தாண்டி வர!
செரியான மாய்ச்சலும்,!
சோம்பேறித்தனமும் அதற்கு!
!
-அசரீரி
அசரீரி