உன்னை சக்களத்தி என்று இகழாமல்!
சிவனின் சிரத்தில் வைத்து நித்தம்!
அழகு பார்த்து மகிழ்ந்ததால் தானா!
அன்று நீ சினம் கொண்டு!
சீறி எழுந்தாய்?!
சீதையை சிறை வைத்த தேசத்தில்!
எம் தமிழன் சிந்திய கண்ணீர்!
உன்னில் உப்பாய் உறைந்தது!
கண்டு மனம் வருந்தி தானோ!
அன்றே கரை தாண்டி!
கொதித்தெழுந்தாய் ?!
வென்ற தோற்ற!
காதல்களின் அடையாளமாக!
மணல் வெளி எங்கிலும்!
பாதச் சுவடுகள்!
இயற்கை என்னும் மருத்துவச்சி!
உன்னில் இருந்து பல செல்வங்களை!
வெளிக்கொணர முயன்ற பிரசவம்!
தோற்று போனதால் பிறந்து விட்ட!
துயரத்தின் அடையாளச் சுவடு!
தானா நீ?!
எங்கள் பசிக்காக!
உன் வளத்தை!
சுரண்டி விட்டோம்!
என்று கருதி நீ!
வருடக் கணக்கில்!
உண்ணாவிரதம்!
இருந்தாயோ?!
உன் அகோரப் பசிக்குப்!
பருக்கையாய் எங்கள்!
கரையில் ஒதுங்கிய!
பிணங்கள்.!
அழித்த நகரமும்!
வளமும் போதாதா!
உனக்கு?!
வருடம் இரண்டு!
கடந்த பின்னும்!
கரை வேட்டியால்!
கரை சேர்க்க!
முடியாத வாழ்க்கையை!
இன்னும் கரை ஓரம்!
தேடுகின்றனர் சிலர்!
குனிந்து கிளிஞ்சல் பொறுக்கும்!
சின்னஞ்சிறு குழந்தை போல.!
நாளைய பொழுதேனும்!
நல்லதாய் விடியட்டும்!
இனி எங்கள் வலைகளில்!
மீன்கள் மட்டுமே தங்கட்டும்.!
-- s.கிருஷ்ணன்
s.கிருஷ்ணன்