பிறர் கொடுக்கும் எதையும்
பிரியத்தோடு ஏற்பவளுக்கு
இன்று மட்டும் ஏனோ முடியவில்லை
பிரிவென்ற ஒன்றை ஏற்பதற்கு
உயிர் கொடுத்தது அன்னை தான்
ஆனால் அந்த உயிருக்கு உணர்வை தந்தது
என்னுயிர் தோழி நீயல்லவா!
எப்படி ஏற்பேன் உன் பிரிவை
எப்படி மறப்பேன் உன் நினைவை!
என்னுடைய சோகங்களும்
உன்னுடைய புன்னகையால்
புறக்கணிக்கப்பட்டது புதுமைதான்
எப்போதும் உன் முகம்
பார்த்து சிரித்தவளை
இன்று மண் பார்த்து
அழ வைக்க எப்படி
மனம் வந்தது!
இனி யாரிடம் காண்பேன்
என்னை பெற்ற அன்னையை,
எனக்கு கிடைக்காத மூத்த சகோதரியை,
கண்களுக்கு சமாதானம் சொல்லி விட்டேன்
மனம் மட்டும் ஏனோ என்னிடம் மன்றாடுகிறது!
ஆண்டுகள் கடந்தும் தெரியவில்லை
ஆனால் இன்று நொடி நேரம் கூட
யுகமாக கழிகிறது!
என்றாவது ஒரு நாள்
இப்புவியின் எதோ ஓர்
மூலையில் என் முகம்
பார்க்கும் போது
அவள் தானே இது என நீ
ஐயப்படும் போது என்
அழுகை அன்று என்னை
அடையாளம் காண்பிக்கும்

ஈஸ்வரி