ஐந்தாண்டுக்கு ஒருமுறை
முறை வைத்து நீர்பாச்சும்
வெள்ளாமைத்திருவிழா,
எங்கள் வீட்டுக்கே வந்து
சேரும் இம்முறை.
சென்றமுறை வெள்ளாமை
அந்த ஊர் மக்களுக்கு
இம்முறை நமக்கு. சென்ற முறை
அவர்கள் நிறையவே,சாப்பிட்டார்கள்
பேராசைக்காரர்கள் .
நிறையவே சாப்பிட்டதால்
நிறையவே அஜீரணம்,அல்சர்
மருத்துவரிடம் வரிசைக்கட்டி
நிற்கிறார்கள்.
அவர்களில் சிலருக்கு
ஒரு ஆண்டு முழுவதும்
சிகிச்சை பெறவேண்டுமாம்
இன்னும் சிலபேருக்கு
அறுவை சிகிச்சையும்
தேவைப்படுமாம்
இது தவிர,இரண்டு மூன்று பேர்
டெல்லி மருத்துவ மனையிலும்
அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்
இந்ததடவை எல்லாம் நமக்குத்தான்
வாரும், சேர்ந்து வாருவோம்
வெள்ளாமையை .
என்னது ? உங்களுக்கும பங்கு
கேட்கிறீர்களா?
கவலைப்படாதீர்கள் உங்களுக்கும்
இருக்கு இலவசங்கள்.
விரைந்து வாருங்கள், இந்த முறை
எல்லா கிராமத்துக்கும் எல்லா
நகரத்துக்கும் வெள்ளாமையில்
பங்கு உண்டு.
ஆனால் தலைமை
விவசாயிக்கு உங்களிடமிருந்து
ஆளுக்கு ஒரு மூட்டை வந்தாக
வேண்டுமிது கட்டாயம்.
வாழ்க ஜனநாயகம்
ராமு குமாரசாமி