உயிர் விளக்கு! - வித்யாசாகர்

Photo by Steve Johnson on Unsplash

மரணத்தை தொடும் !
வலியோ பயமோ தெரியுமா உங்களுக்கு..?!
அந்த பயத்தின் நச்சு நிமிடங்களுள் !
எத்தனை முகத்தை !
நினைத்துக்கொள்ள முடியுமென்று எண்ணுகிறீர்கள் ?!
செய்த நல்லதும் கெட்டதுமெல்லாம்!
பயமுறுத்தும் தருணத்தைவிட!
அந்நேரத்தில் !
உயிர்த்திருப்பது அப்படியொரு கொடிது!
நிறையப்பேரைப் போல !
நானுமப்படி !
சில சமயங்களில் !
உயிர்த்துக் கிடக்கிறேன் !
அப்போது வலி' அப்படி வலிக்கிறது !
பயம்' ஓடும் ரத்தமெல்லாம் பரவுகிறது !
வலிக்க வலிக்க !
உடன் இருப்போரை நினைப்பேன் - அது!
இன்னும் வலிக்கும் !
ச்ச என்ன இது வலியென்றுப் !
பிடுங்கி ஓரமெறிந்துவிட்டு !
உடனிருப்போருக்காய் அமர்ந்துக் கொள்கிறேன் !
இப்படி நான் பிடுங்கி பிடுங்கிப் போட்ட !
எனது வலிக்குள் இன்னும் !
ஆயிரம் உயிர் விளக்குகள் எரியும்!
ஒரேயொரு எனது !
இருளும் பொழுதிற்குள் !
ஆயிரம் விடியல்கள் விடியும் !
விடியலில் எரியும் விளக்கொன்று !
அதன்பின் எனக்காகவும்தான் !
எரிந்துப் போகட்டுமே போ..!
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.