அசைத்துப் பார்த்தேன்!
கயிற்றால் கட்டிய காற்று!
உறுமிப் பார்த்தேன்!
சுடரால் பிணைந்த சூரியன்!
கொழுவிப் பார்த்தேன்!
மொட்டால் மெழுகிய மலர்.!
விரல் நுனிவரை உண்மை உரைத்தது!
பிரண்டு மடியாத நா!
என்னில் வளர்த்த மூச்சு பிணத்தோடு சேரும் வரை!
கருவாடு நெருப்போடு வேவி!
உள்ளம் குளிர்ந்தது!
காலை உயர்த்தி தலைமேல் பதித்து!
நடக்கத் தொடங்கிய கர்வம்!
ஓயாத அலையில் குளித்துக் கொண்டிருக்கிறேன்!
ஒரு ஆண் அலையேனும் அழைக்க!
இந்தப் பன்னல்கள் !
என்னைத் தூக்கி நுரையில் தள்ளட்டும்!
காக்கை ஒரு மிரடு குடித்தது!
என் அழுகையின் நீரை!
பசிதீர்ந்ததோ.!
பாசச் சள்ளிகளை நிறைத்து கட்டிய கூடு!
யாரும் கலைக்காது!
உயரத்தில் மனிதவாடை வீசாது காணும்!
இவனும்…. !
டீன்கபூர்