ஒரு சீனிக்கட்டியை இழுத்துச் செல்லதைப்போல!
என்னை லாவகமாகப் பிடித்துச் செல்கிறது!
ஓர் எறும்பு!
என் செவிகள் இழுக்கப்பட்டு!
தலையில்; ஒரு குட்டும் போட்டு அழைத்துச்செல்கிறது. !
தலைமையிடம் நான்; தவறாகப் பேசப்படுகிறேன்.!
எனது ஒவ்வொரு அங்கங்களும் எறும்பின்!
கோர நகங்களால் கிழிக்கப்பட்டு!
துண்டுகளாக்கப்பட்டு!
இனங்காண இயலாத ஒரு நிலத்தின் துளைக்குள்!
அடக்கப்படுகின்றன.!
தலைமை துவைத்தெடுத்த என் பாசம்!
அவர் மேசையின் மீது!
ஒரு மொட்டைக் கடிதமாக அல்லது!
சுவர்களின் பூச்சுக்களில் பேசப்படுகின்றன.!
மானம் என்பது உயிர்; இருக்கும்வரை தான்!
அழகிய கனவு இயற்கையாக அடுக்கப்படும்வரை தான்!
வெளிச்சம் இருளுக்காகவே என்பதை!
எறும்புகளும் மறந்தே விட்டன.!
எலியின் மரண வேதனை பூனைக்கு!
எங்கு தெரியப்போகிறது?!
அதுக்கு விளையாட்டு!
எனக்காகவே ஓர் எறும்பு படைக்கப்பட்டிருக்கிறது.!
தினமும் நான் இழுத்துச் செல்லப்படுகிறேன்.!
கொல்லப்படுகிறேன்.!
ஒரு மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வரை.!
!
-- டீன்கபூர்
டீன்கபூர்