நான் தேர்தலில் குதியாத வேட்பாளன்!
என் காடு தீப்பிடித்த போது!
என் வானம் அழுது அணை உடைந்தது!
கறுப்பு நிலவுக்குள்.!
என் மூக்கு சுழலும் காற்றையே சுவாசிக்க!
என் கிடுகுகள்,!
என் தகரங்கள்,!
சிறகோடு கிளம்பின.!
என் கார் புழுதியைக் கொளித்து!
சேற்றை விசிறி!
உழுத தெருவில் நான் தோற்றுப் போனதில்லை!
என் வாக்குகள் செதுக்கப்பட்டு நடப்படுகின்றன!
சந்தி மகிழ்ந்தது!
வாக்காளன் ஒரு வரம்பினுள்!
துப்பிய நீராகப் பாய்கிறான்!
தந்திரம் பற்றி பாடலை!
அவனுக்கு நரி கற்றுக் கொடுத்தது!
இரவுகள் குமிக்கப்பட்டு!
சக்கர தேசத்துக்குள்!
எவனும் நிமிர்ந்திட இயலா.!
ஆகாயம் தட்டும் தலையில்!
உருட்டிடும் குண்டுமணியாக என் நினைவுகள்!
ஒரு தடைக்குள் விழிக்கின்றன.!
பச்சைக்குள் பிடித்த புழுக்களையும்!
நீலத்தில் படிந்த கறைகளையும்!
சொண்டுகளால் பருகிக் கழிக்க!
தேர்தலில் குதியாத வேட்பாளனாக.!
அமைதியை ஒரு படுகுழி மரணமாய்ப் பேச!
கற்பனையிலும் எனக்குள் ஒரு அமைதி!
தேசத்தை உருவாக்க!
என் அடையாள அட்டையும் தேவையில்லை எனக்கு.!
!
- டீன்கபூர்
டீன்கபூர்