விழா மேடையில் உன் பெயர்!
உச்சரிக்கையில் முகம் சாய்த்து!
வெட்கத்துடன் மூன்றாம்பிறையாய்!
இதழ் விரித்து நீ புன்னகைக்க!
என் முகமும் பிரதிபலிக்க!
விழாவுக்காக ஒரு புல் கூடபுடுங்காம!
என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு!
என என் மனசாட்சி-!
கீழ்வானம் சிவக்க!
புல் இனங்கள் துயில் எழவில்லையா!
அவள் பெயரின் ஒலி என்னுள்!
காதலாய் பரவி என் இதழ் விரிக்காதா!
பரமனின் உடுக்கை நாதத்தில!
உயிர்கள் பிறந்ததாய் மெய்ஞானம்!
எரிமலையின் வெடிசத்தத்தில்!
பிறந்ததாய் விஞ்ஞானம்!
உன் பெயரின் ஒலியில்!
நான் பிறந்ததாய் என்ஞானம்!
நான்மறைகளும் காற்றில் ஒலியாய்!
இன்றும் உள்ளதாக நம்பிக்கை!
உன் பெயரின் ஒலியில் !
என் நாளும் என் இருக்கை!
பெயர்களின் ஒலி வலிமையை!
அனுமனுக்கு பின் நானறிவேன்!
உன் பெயர் உச்சரிக்க படும்பொழுது!
எல்லாம் உயிர்ப்பிக்கபடுகிறேனே !
எனது ராமஜெயம் உன் பெயர்தானே!
உன் பாட்டியின் பெயர் உனக்கு!
உன் தந்தை சூட்டிய காரணம்!
இப்போதான் விளங்கிறது!
என் மூலம் ஊரிலும் தெருவிலும் !
புது பேனா எழுதும் முதல்!
பரிசோதனை வார்த்தையாய்!
என் கை எழுதும் உன் பெயர்!
உன் பெயர் உச்சரிக்கபடும் போதெல்லாம்!
என் கண்கள் உனை தேடும் எல்லாஇடத்திலும்!
உன் பெயர் சூட்டிய !
சின்ன குழந்தைகளின் கன்னம்!
செல்லமாய் தடவும் என் கைகள்!
உன் பெயர் சூட்டிய !
பாட்டிமார்களுக்கு பாதை கடக்க!
உதவும் என் கால்கள்!
மொழி பாடங்களில் எழுதும்!
கடிதங்களின் முகவரியில்!
எல்லாம் உன் பெயர்!
என் மின்னஞ்சல் முகவரியின்!
கடவுசொல்லாக மட்டும்!
உன் பெயரை வைக்கவில்லை!
என்னை நீ கடவு செய்யகூடாதென

வி. பிச்சுமணி