இரவில் வாங்கிய!
விடியல்!
எங்கள் விவேகத்தின் !
வெளிச்சம்...!
எங்கள் கொடியை!
உயர்த்தவே!
'குமரன்' கள் நாங்கள்!
கொலையுண்டோம்...!
மாற்றானுடையதை!
மிதிக்க அல்ல !
மறுக்கவே!
ஆசைப்பட்டோம்... !
இறக்கப் படாமல் இறங்கிய!
கொடியின்!
இடத்தை பற்றியது!
ஏற்றாத போதும்!
எங்கள் உள்ளத்தின்!
உச்சியில் பறந்த !
எம் கொடி!
இன்னா செய்தார்க்கு!
நாண!
நன்னயம் செய்யும்!
நோக்கு அது...!
பெற்ற பிள்ளைக்கு!
பால் என்ன!
பழஞ்சோறும்!
புகட்டாதாள் எம் !
பாரதத்தாய்...!
என்றாலும்!
பிச்சை வாழ்க்கை!
அச்ச உணர்வை!
ஊடட்வில்லை எங்கள் !
உதிரத்தில்... !
அத்து விட்டது!
விலங்கு - ஆக!
பெற்றுவிட்டோம் !
புதுவாழ்வு...!
கட்டிவிட்டோம்!
மனக்கோவில்...!
அங்கே....!
ஜாதி பேய்களை!
கொண்று!
மத பேதங்கள்ற்ற!
ஓர்வாயில்...!
காமங்கள் குரோதங்கள்!
விட்டு!
கடன் தொல்லை!
அழித்ததோர் வாயில்...!
பட்டப் பகலில்!
கொள்ளை மற்றும்!
பட்டினிச் சாவுமிங்கில்லை!
என!
பறைச்சாற்றி!
நிக்குதோர் வாயில்...!
திறந்து கிடக்குதோர் !
வாயிலாங்கே!
திறமையுள்ளோர்!
எல்லோர்க்கும்!
வேலை...!
நட்ட நடுவினில்!
எம் நாடு!
பச்சை பசுமை!
போர்த்த பூங்காடு...!
பூக்களின் நடுவினில்!
புதுநங்கை நல்லாள் !
பட்டத்துன்பங்கள்!
மறந்துவிட்டாள்!
பந்தைபிடித்தே !
ஆடுகின்றாள்!
பாடுகின்றாள் எங்கள்!
பாரதத்தாய்
s.உமா