கருவாய் உன்னுள்!
நான் கலந்தபோது!
அந்த!
இருட்டுச் சிறையில்!
இருந்த சுதந்திரம்!
வெளிச்ச வெளியில்!
வெட்டப்பட்ட சிறகுகளாய்...!
மடிகிடந்து!
மார்பணைத்து!
கழுத்து வளைவில்!
முகம் புதைத்து!
கண்ணங்குழிய!
கண்ட என் கனவு!
பஞ்சு மெத்தை தலையணையில்!
எட்டாகனியாய்!
வட்ட மாத்திரைக்குள்...!
அறியா பருவத்தில்!
உணரா இனிமைகள்!
காலம் கடந்து!
தூங்கா என்!
கண்களில்!
எழுதா கவிதைகளாய்...!
கனவு மெய்ப்பட!
வேண்டும்!
ஓர் உயிர்ப்பு!
உன்னுள் கருவாய்!
மறுபடியும்..!
உமா
s.உமா