வலி - s.உமா

Photo by Paweł Czerwiński on Unsplash

பிரசவ `வார்ல்` டில்!
பேறுக்காக காத்துக்கிடந்தேன்.!
பொய் வலிதான் !
புறப்பட்டு வந்து விட்டேன்!
பாதுகாப்பாய்!
பிள்ளைப்பெற... !
அந்தோ !!
எனக்கு நடந்தது!
`அவசர` சிகிச்சை!
அறுவை சிகிச்சை!
ஆனால் !
அவசியமே இல்லாமல்!
வலியே இல்லாமல்!
குழந்தை!
பிறப்பிக்கப்பட்டது.!
அழுதது, !
சிரித்தது,!
வளர்ந்தது...!
இன்னமும்!
வலித்துக்கொண்டேயிருக்கிறது...!
மனம்,!
வலிக்காக ஏங்கி... !
நிரந்தர வலியை!
எனக்களித்தவர்கள்!
அங்கே!
சிரித்துக் கொண்டேயிருகிறார்கள்!
மனங்களை விட்டு!
பணங்களை மட்டுமே !
`எண்ணி`க் கொண்டு
s.உமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.