வேரை நோக்கிய பயணம்.. !
வேரை நோக்கிய பயணம்!
---------------------------------!
பூவொன்றின் காம்பை!
ஊடுறுவி வேரை நோக்கி!
பயணிக்கும் வாய்ப்பு!
கிட்டியது...!
பாலின சமத்துவத்தின் ஈரத்தில்!
அது மண்ணை முட்டிக்!
கொண்டிருந்தது...!
மண்ணோ முட்டும் !
வேரைச் சுற்றி!
இறுகிக்கொண்டிருந்தது...!
நான் இளகிய சேற்று நீரில்!
என் தின்மையை!
சோதித்துக்கொண்டிருந்தேன்
ராம்ப்ரசாத், சென்னை