தலையணை!
!
01.!
துப்புரவுத் தொழிலாளி!
-----------------------------!
வானம் பார்த்து!
வாய் பிளந்து கிடந்தது!
நடுத்தெருவில் அந்தச் சாக்கடைக்குழி...!
ஊருக்கெல்லாம் வேண்டாதவை!
ஒன்றாய்க்கூடி தமக்குள்!
கரி நாள் கொண்டாடி!
முடித்திருந்தன கொட்டிக் கொண்டிருந்த!
மழையில்...!
எச்சிலோடு புசிக்கையில்!
உதட்டோரம் கரை ஒதுங்கும்!
பருக்கை உணவாய்!
ஒதுங்கியிருந்தன சாக்கடை!
வாயோரம் சில கழிவுகள்...!
கடைவாய்ப் பற்களில்!
சிக்கி அடைத்துக் கொண்டவைகளை!
சிரத்தையாய் பிடுங்கிச்!
சுத்தம் செய்துகொண்டிருந்தான்!
அந்த துப்புரவுத் தொழிலாளி....!
!
02.!
காற்றடைத்த தலையணை!
--------------------------------!
காற்றடைத்த தலையணையின்!
குறுகிய வாயை!
அடைத்திருந்த பொத்தானை!
மெல்லத் திருகினேன்...!
மடை திறந்த!
வெள்ளமாகிக்கொண்டிருந்தது!
காற்று...!
நெருங்கிக் கொண்டிருந்த!
உறக்கம் என் விரல் பிடித்து!
நெகிழ்த்திய பொத்தானை!
மீண்டும் நெருக்க!
அடைபட்ட காற்று!
என் உறக்கத்தின் ஆயுளை!
கணக்கிடத் தொடங்கியிருந்தது

ராம்ப்ரசாத், சென்னை