தமிழ் வாழ்த்து - பாண்டூ

Photo by Jr Korpa on Unsplash

கத்துங்கடல் ஒத்த முதிர்வினை !
முத்துமணி சிந்தும் எழிலினை !
பெற்றதொரு செம்மைத் திருமொழி - தமிழ்வாழ்க !
குள்ளமுனி கொஞ்சி மகிழ்ந்ததும் !
நல்லபல சங்கம் வளர்த்ததும் !
சொல்லிலுயா அன்னைத் தவமொழி - தமிழ்வாழ்க !
தக்கச்செறி வுற்ற இலக்கணம் !
மக்கள்வியந் திட்ட இலக்கியம் !
மிக்கதொரு நம்மின் உயிர்மொழி - தமிழ்வாழ்க !
சொட்டுஞ்சுவை கல்லைக் கரைத்திடும் !
கொட்டும்மழை உள்ளம் நிறைத்திடும் !
எட்டுத்திசை எங்கும் விரிந்தநல் - தமிழ்வாழ்க !
அங்கமதில் முற்றும் புதுமையும் !
சங்கமதில் கண்டச் செழுமையும் !
தங்கிவரும் எங்கள் திருமகள் - தமிழ்வாழ்க !
செப்பும்மொழி சற்றும் இதற்கொரு !
ஒப்புமிலை மற்ற அயல்மொழி !
மூப்புமிலா ஒற்றை முதுமொழி - தமிழ்வாழ்க !
அன்றுமுதல் இன்று வரையிலும் !
என்றுமுள இன்பக் கனிமொழி !
கன்னித்தமிழ் என்று விளங்கிடும் - தமிழ்வாழ்க !
பள்ளிதனில் கல்வி பயில்வதும் !
உள்ளதொரு எந்த அலுவலும் !
தௌ¢¢ளுதமிழ் தன்னில் கொணா¢ந்திட - தமிழோங்கும்! !
-- பாண்டூ ... !
சிவகாசி.
+91 98436-10020
பாண்டூ

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.