01.!
தற்கொலை!
----------------- !
உயிர் கொண்டு!
வாழும் ஜீவராசிகளுள்!
எதுவும்!
தன்னுயிரைத் தானே!
எடுப்பதில்லை...!
தன் வாழ்கையைத்!
தானே வெறுப்பதில்லை...!
தானே முன்னின்று!
தன் காரியத்திற்குக்!
காரணமாவதில்லை...!
நிறுத்தி நிதானித்துத்!
தன்னைத் தானே!
கொல்லுவதில்லை,!
மனிதனைத்தவிர...!
குரங்காய் இருந்தபோதில்லாதது!
கால மாற்றத்தில்!
வளர்ந்துவிட்டதோ...!
மனிதனென்று பெயர்!
கொண்டபின் வந்து!
ஒட்டிக்கொண்டதோ?!
இந்த கோழைத்தனத்தைத்!
தோற்றுவித்த நுண்ணறிவும்!
ஓர் அறிவோ?!
தன்னைத்தானே கொன்றுபோடவோ!
இத்தனை நவீனங்களும்,!
இத்தனை கண்டுபிடிப்புகளும்...!
துன்பத்தை ஆய்வது...!
மீள வழியின்றேல்!
மாய்வது...!
இதற்கு குரங்குகளாய்!
இருப்பது மேல்!
என்ற கரைச்சல்!
கேட்கிறது காடுகளில்...!
உன் மரணத்தைக் கூடவா!
ஆள நினைப்பாய்?!
என்றே கேளிபேசுகிறது!
அக்கூட்டம்...!
உண்மை யாதெனில்,!
அறிவை ஆளும்!
விலங்குகள் அடைந்தன!
கூண்டுகளில்...!
அறிவை!
ஆள விட்டு விட்டவன்!
புதைந்தான் மண்ணுக்கடியில்...!
!
02.!
ஆற்றாமை!
---------------!
உன் ஸ்பரிசம்!
உணர முடியாது ஏங்கும்!
என் விரல்கள்,!
உன் கூந்தல்!
அணியப்போகும்!
செவ்விதழ் ரோஜா!
இதுவாக இருக்கலாமென!
தோட்டத்தின் அத்தனை!
ரோஜாவையும்!
ஒருமுறை தொட்டு தன்!
ஆற்றாமையை!
தீர்த்துக்கொள்கின்றன...!
அதுபோல்!
உன்னை தனதாக்கிவிட!
இயலாத தன்!
ஆற்றாமையைத்தான்!
உன் நினைவுகளை!
சுவாசித்தே தீர்க்கிறதோ!
என்னிதயம்
ராம்ப்ரசாத், சென்னை