அவனது கிழக்கில்!
கதிரவன் உதிக்காது!
சந்தன மரக்கட்டில் கூட!
முள்படுக்கையாக மாறும்!
அவனது உடலே!
அவனுக்குப் பாரமாகும்!
அந்த நாளில்!
நரகத்தின் நிழல் வீட்டினுள் கவிந்து!
அங்கிருந்த வெளிச்சத்தை விரட்டியடிக்கும்!
கண்கள் ஜீவ ஒளியிழந்து!
தூக்கத்திற்குத் தூண்டில் போடும்!
தாயோ, தாரமோ எவரேனும்!
தனது தலையை மடியில் வைத்து!
கேசத்தை வருடமாட்டார்களா - என!
அவன் மனம் மானிட ஸ்பரிசத்துக்கு!
ஏங்கித் தவிக்கும்!
மரணம்-கடவுளின் அன்புப் பரிசாகவும்!
வாழ்வு-கருணையற்ற கடவுள்!
தனது கொடிய கரங்களால் எழுதிய!
தீர்ப்பாகவும் படும்!
நிமிடங்கள் யுகமாகும்!
போகங்களில் எந்நேரமும் திளைக்கத் தோன்றும்!
விரக்தியின் விளிம்பில்,!
றெக்கை முளைக்காத கூட்டுப்புழுவாய்!
உயிர்வாழ்வதை விட!
மடிந்து மக்கிப்போவதே மேலெனத் தோன்றும்!
கனவுலோகத்தால் கைவிடப்பட்டவனின்!
கற்பனை இப்படிப்போகும் -!
வங்கியில் கணக்கு வைத்திருப்பவருக்கு!
மட்டும் தான் இரவுப்பொழுதில் உறக்கம்!
அப்பணத்திற்கு வட்டியாக அளிக்கப்படும்!
என சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக நேற்று!
செய்தித்தாள்களில் படித்தது போன்ற!
ஞாபகம் எழும்!
தூக்கம் ஒன்றே துக்கம் குறைக்கும்!
இலவச நிவாரணி!
அது கண்களைத் தேடி வந்து!
தழுவாதபோது!
வாழ்வு மகள் பூமாலையுடனும்,!
புன்சிரிப்புடனும் எதிரில் நின்றாலும்...!
அவன் கரங்கள்!
மரண தேவதையை ஆரத்தழுவிக்கொள்ளும்
ப.மதியழகன்