சமுதாய நிகழ்வுகளை உள்வாங்கி!
கவிதையாய்ப் புனையும்!
இவனது கற்பனைத் திறனே!
இவனுடைய சொத்து!
பத்திரத்தில் பதிய முடியுமா!
பலர் மத்தியில் பெருமிதம்!
கொள்ள முடியுமா!
இவன் இதை வைத்து!
உறவுகளின் உதாசீனப்படுத்தலையும்!
நண்பர்களின் நையாண்டியையும்!
மனைவியின் அன்றாட!
ஏச்சுப் பேச்சுக்களையும்!
ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டு!
கண்ணுறக்கம் கூட முள்படுக்கைதனில் என்ற!
இக்கட்டு தொண்டைக்குழியில் உயிர்நோக!
இறுக்கிய சூழ்நிலையில்!
சுழன்று சுழன்று வீசும்!
சூறாவளியிலிருந்து!
இவனது உள்ளுக்குள் எரியும்!
படைப்புக்கு பிரகிருதியான சுடரை!
அணையாமல்!
ஜீவன் பிரியும் வரை!
தமிழ்ப்பிரவாகம் குறையாமல்!
காப்பாற்றி வந்தான்!
தன்னை தமிழுக்கு அர்பணித்து!
மகாகவிஞன் மறைவுக்குப்பின்!
கல்லறையில் ஏற்றிவைத்த அகல் விளக்கு!
காற்றினால் அணைந்த பின்புதான்!
இவனுடைய கவிச்சுடர் விளக்கு!
இலக்கியவானில்!
விடிவெள்ளியாய் ஒளிவீசத்துவங்கியது!
காலவெள்ளம் கவிஞனை!
அடித்துச் சென்றுவிட்டபோதிலும்!
அவனது கவிவெள்ளத்தில்!
சிக்காமல் மீண்டவர் யார்!
இங்கு

ப.மதியழகன்