சிறுத்த இடையும் !
சின்ன விழியுமாய் !
என்னை தினம் தினம் !
சித்திரவதை செய்கின்றாய் !
எனக்குள்ளே உன்னைப்பற்றி !
கற்பனை ஓவியம் தீட்டி வைத்தேன் !
நேரில்கண்டால் சிலவேளை மாற்றமடையலாம் !
எனினும் வானவில் என்றுமே !
வண்ணம் இழந்தது இல்லை !
தொலைவிலேயே இருந்துகொள் !
உன்னை நான் ரசித்துக்கொள்கின்றேன் !
இது பருவக்காதல் இல்லை !
பழகிய காதல் இல்லை !
புரிந்த காதல் !
என்மனதை நீயும் !
உன் மனதை நானும் !
புரிந்துகொண்ட காதல் !
உனக்காக நான் வாழும்போது !
எனக்காக நீ வாழும் காதல் !
உறவாய் இருந்தவள்தான் !
என்தன் உயிராக இன்று இருக்கின்றாய் !
உன்பெயர் உச்சரிக்கமுன்பே !
எனக்குள் ஓராயிரம் மின்னல்கள் பரவும் உணா¢வு !
உன் படம் கண்டுகொண்டால் !
சொல்லத்தேவையில்லை சொர்க்கத்தில் !
நான் வாழும் எண்ணம் !
எனக்குள்ளே உன்னைப்பற்றி வரைந்த !
ஓவியத்தை தினம் தினம் !
கனவில் மீட்டி கண்டுகொள்கின்றேன் !
நிழல்படம் சிலநொடி நேர்த்தியற்றதாக இருக்கலாம் !
நிஜம் நீ என்றென்றும் மாறமாட்டாய் !
வேண்டுமடி நீ எனக்கு !
கொலுசொலிபோல் சினுங்கிக்கொள்ளவும் !
வெறுப்பதுபோல் விரும்பியழைக்கவும் !
ஒருநொடி உச்சுக்கொட்டி !
என்னை வெறுப்பேத்தவும் !
செல்லமாய் சீறிவிழவும் !
வேண்டும் நீ எனக்கு !
எப்போது சொல்லிக்கொள்வாய் !
என்னை நீ காதலிப்பதாய் !
காத்திருப்பேன் உன் பூவிதழ் வரைந்திடும் !
அந்த பொன்மொழிக்காய் !
என்றென்றும் காத்திருப்பேன் !
காலமெல்லாம் உன் நினைவுடனேயே வாழமுடியும் !
காதல் என்று ஒரு வா£¢த்தை !
எனக்குள் நீ விதைத்தால் !
கறுப்புநிலவினை காதல் செய்யும் கனவுக்காதலன் ந.பரணீதரன் !
30-07-2003
ந.பரணீதரன்