நதிபோல பாய்ந்து !
கரையின்றி தவித்த நாட்கள் !
கடல் கண்டபின்னாளும் !
நதி பாய்ந்த தடம் நோக்கி !
கண்ணீர் விட்ட நாட்கள் !
எத்தனை எத்தனையோ ? !
புதிய உறவிற்காய் !
பழையவற்றை விலக்கிய நாட்கள் !
புதிய உறவே புதிரான போது !
பழையவற்றை எண்ணி வேதனித்த நாட்கள் !
அன்று புரிந்திருந்தும் புரியமனமில்லை !
இன்று அது வேதனிக்கின்றுது !
அம்மா தந்த இறுதி முத்தத்தை !
இன்றும் எண்ணியெண்ணி !
விழிவழி நீரால் பூமி கழுவுகின்றேன் !
முகமறியாதவன் பாசம் கொட்டுகின்றான் !
பாவி மனதோ தாயன்பிற்காய் !
என்னைப்போல் எத்தனை எத்தனை !
பிரிவு என்பது நரகசுகம் !
கவிஞன் சொல்லிவிடலாம் !
அனுபவிக்க முடியாது பிரிவு !
என்பது விசம் சிறுக சிறுக !
எம்மை தின்றே கொண்றுவிடும் !
!
- ந.பரணீதரன்
ந.பரணீதரன்