அமாவாசை நிலா - ந.பரணீதரன்

Photo by FLY:D on Unsplash

வானம் நிராகரித்த !
என் வாழ்வு ஏற்றுக்கொண்ட !
நிலா மகளே.. !
தொலைவில் இருந்துகொண்டு !
வானவீதியில் உலாவருகின்றாய் !
என் வாழ்வின் விதியிலும் !
குறுக்கே வருகின்றாய் !
இடைஞ்சல்கள் இல்லாத !
புதிய செருகல் நீ !
இடைச்செருகல் நீ. . !
புற்களில் உறங்கிடும் பனித்துளிகள் !
உன்தன் அழகை காட்டுவதுபோல் !
என்தன் உதிர்ந்த முடிகளிலும் !
நீ நிறைந்து இருக்கின்றாய் !
கவிக்கு இசைவான !
கனவில் இதமான !
கரைந்துபோகாத வண்ணம் நீ !
கடலின் மடியிலும் !
நீ உறங்கிக்கொள்கின்றாய் !
வானின் மையத்திலும் !
பள்ளி கொள்கின்றாய் !
எப்படி அது சாத்தியமாகின்றது ? !
ஏனெனில் !
என்தன் உள்ளத்திலும் நீதானே !
நிரப்பியிருக்கின்றாய் உன்னை !
கனவு வந்து தொல்லை தர !
கவி எழுதவந்தேன் - உன் !
கண்கள் கண்டபின்னாலே !
வா£¢த்தை தொலைத்து நிற்கின்றேன் !
நிலவின் உள்ளேயும் நிலவை காண்பது !
உன்னில்தானே. . ஏனெனில் நீ !
அமாவாசைக்கு வந்த !
அற்புத நிலா !
உனக்குள் அடுக்கடுக்காய் !
பௌர்ணமி நிலாக்கூட்டம் !
குயிலின் குரலோசை !
உன்னிடம் இரந்ததா ? !
சுருதி மாறாமல் !
சற்றும் இளகாமல் !
அப்படியே அச்சாகின்றதே !
உன்னை எப்படி வர்ணித்துக்கொள்வது !
கம்பனாகவா இல்லை வைரமுத்தாகவா !
என்னை மாற்றிக்கொள்வது !
ம்கூம். . !
உன்னை வர்ணிக்க கவிஞன் இல்லை
ந.பரணீதரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.