காதல்தான் எனக்கு புத்துயிர் தருகின்றது. !
தாயின் மீது தாய்நாட்டின்மீது உற்றார் !
உறவினர் மீது உண்மை நட்பின் மீது !
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கறுப்பு !
நிலவின்மீதான காதல்.. உங்களிற்காய் !
ஓரு சில துளிகள். . .காதல் துளிகள்... !
!
1) !
இன்றைய பெண்ணா !
இலக்கியப்பெண்ணா நீ !
இப்படித் தயங்குகின்றாய் !
என் பெயர் சொல்லிக்கொள்ள . . !
2) !
உனக்காக ஏதேதோ ஏக்கத்துடன் !
காத்திருந்தேன் கால்கள் வலிக்க !
தென்றல் வருடவில்லை !
திங்கள் ஓளியூட்டவில்லை !
மலரோ வாசம் பகரவில்லை !
மங்கை உன்தன் வருகைமட்டும்.. !
3) !
ஒற்றைத்துணிவுடன் என் காதலை !
துளித்துளியாய் மொழிந்துவைத்தேன் !
பிரசவத்திற்காய் காத்திருந்த !
நிறைமாத கர்ப்பினிபோல் !
பொத்திவைத்த ஆசைகளை !
பூட்டிவைத்த உன் வெட்கத்தை !
தூக்கியெறிந்து நீ தந்த முத்தம் !
இன்றுவரை இனிக்கின்றது !
நீ தான் தொலைவில் !
நினைவுகளுடன்தான் நாம் வாழ்கின்றோம் !
4) !
வேலைக்களைப்பில் வீழ்ந்து படுக்கும் எனக்கு !
பீப் பீப் இசையுடன் வரும் உன் !
எஸ் எம் எஸ் தான் உற்சாகம் தருகின்றது !
ஏழைச்சிறுவனிற்கு கிடைத்த ஓற்றை மிட்டாய் போல !
5) !
உன்னைத்தான் கருவாய் வைத்து !
வரைகின்றேன் ஓர் கவி !
இன்றுவரை உனக்கு ஏன் புரியவில்லை ! !
இல்லை புரிந்தும் மௌனிக்கின்றாயா ? !
அதை நான் சொல்லவேண்டும என.. !
நானும் காத்திருக்கின்றேன் நீ !
சொல்லிக்கொள்வாய் என . . !
6) !
நண்பர்களின் கிண்டல் மத்தியிலும் !
நாசூக்காய் நான் அனுப்பும் எஸ்எம்எஸ் !
அதற்காய் நீ அனுப்பும் பதில் !
புரிகின்றது காதலை மறைத்துவைப்பதிலும் !
ஓர் சுகம் இருக்கின்றது !
சந்தித்துக்கொள்ளாமல் இப்படியே காதலிப்போமா ? !
7) !
கருவறைக்குள் உழன்றபோதே !
புரிந்தேன் எனக்காய் ஓருத்தி எங்கோ இருப்பதாய் !
அவள் நீதான் என்று இன்றுவரை ஊகிக்கவில்லை !
எங்கிருப்பாய் நீ என ஏங்கித்திரிந்தேன் !
இங்குதான் நீ இருந்தாய் என !
இன்றுதான் அறிநதுகொண்டேன் !
8) !
விழிமூடிக்கொண்டாலும் விலகமறுக்கும் ஓளி !
போர்த்திப்படுத்தாலும் புரட்டிப்போடும் குளிர் !
கட்டிவைத்தாலும் துள்ளியோடும் மனம் !
எல்லாமே உன் அருகாமை, உன் ஸ்பரிசம் !
அன்று தந்த இன்றைய நினைவுகள் !
என் சுவாசம்கூட உன்வாசம் தேடுது !
9) !
சுயம் என்னைவிட்டு போனாலும் !
நிதம் உன் நினைவுகள் போகாது !
வானவில் காட்டிய உன் விழிகள் !
வாசல்வரை வந்துபோன உன் கொலுசொலிகள் !
மனதின் ஓரம் வருடிச்சென்ற இதழின்மென்மை !
என்றுமே என்னைவிட்டு விலகாது !
10) !
அழகழகாய் கவிவடித்தேன் !
வார்த்தைக்குள் வாசம் சேர்த்தேன் !
உனக்காய் எங்கேயோ தேடி !
எடுத்து கோர்த்தேன் மாலைகளாய் !
ஒன்றுமே உன்னைப்போல மென்மையாய் இல்லையே ! !
நீ தான் என் இனிய கவிதை ! !
உன்னைவிட வேண்டுமா எனக்கு வேறு கவிதை ! !
11) !
என்றுதான் திறந்துகொள்ளுமோ !
என்மீதான உன்காதல்வெளிச்சம் !
ஒற்றைக்கால் தவமிருக்கும்கொக்குபோல !
இலவுகாக்கின்றேன் உன்தன் இதழ்மொழிக்காக !
எழுதம் மடலின் முடிவில் என்றுதான் !
எழுதிக்கொள்வாய் காதலுடன் என !
12) !
மாலையானதும் மனம் அலைபாய்கின்றது !
ஓடி ஒளிந்து தூணின் பின்னிருந்து நோக்கும் !
பிஞ்சுக்குழந்தைபோல் சின்னதொரு சிரிப்புடன் !
வாசல் வந்து நோக்குகின்றேன் !
உன் கொலுசொலி கேட்காதா ? !
உன் கூந்தல் வாசம் வீசாதா ? !
மாட்டின் சலங்கையொலிகளையும் !
மலர்களின் மகரந்த வாசங்களையும் !
விஞ்சிக்கொண்டே. . ! !
இன்னமும் வளரும் இந்த துளிகள்
ந.பரணீதரன்