இருண்டவர்கள் நாம் - ந.பரணீதரன்

Photo by FLY:D on Unsplash

அறியாத வயதில் கால் !
தடுக்கிவீழ்ந்து முத்தமிட்ட நாட்கள் !
அறிந்த வயதில் குனிவதா நான் என !
அகங்காரம் கொண்ட நாட்கள் !
வீழ்ந்தாலும் மீசையில் மண் ஓட்டுவதில்லை என !
வீறாப்பு பேசித்திரிந்த நாட்கள் !
எல்லாமே காற்றோடு காற்றாய் கரைந்தே போய்விட்டது. !
இனவாதபோரினால் மண் தன் இனத்தை தொலைக்கின்றது !
கப்பலேறும்போதே எம் கனவுகளும் ஏறிவிட்டன !
அன்னிய மண்ணல்ல அயல் மண்தான் !
புரியாத மொழி. . புரிந்த மொழிக்கு பூட்டு !
அனுபவித்த வேதனைகள் அளவில்லை !
கால் பதிக்கும்போதே அந்த மண் !
என்னை கிண்டலாய் ஒரு தரம் !
வீழ்த்திப்பார்த்தது. . மகனே !
முத்தமிட்டுக்கொள் என்னை !
நீ முக்குளிக்கப்போவது !
இம் மண்ணில்தான் என்பதுபோல !
நாட்கள் மின்சார ரெயில்போல் வேகமாய் நகர்ந்தோடியது !
அவற்றிடமும் இறக்கைகளா !
இப்படி பறக்கின்றதே !
நாட்களை மாதங்கள் ஆக்கிரமிக்க !
மாதங்களை வருடங்கள் பலாத்காரம் செய்துகொண்டன !
இரண்டு ஆண்டுகள் நாணலுமல்ல ஆலுமல்ல !
இரண்டும்கெட்டான் வாழ்க்கை வாழ்ந்தேன் !
பிறக்கின்றபோதே தமிழன் !
சிறைவாசம் எத்தனை நாட்கள் என !
குறித்துக்கொண்டே பிறக்கின்றான் !
எனக்கும் குறித்திருந்தது புரியாமல் இருந்துவிட்டேன் !
தமிழன் எல்லாம் பயங்கரவாதி !
மருண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய் !
என்பதுபோல் நாம் !
இருண்டிருந்தோம் அவன் மருண்டிருந்தான் !
பேயாகதோன்றி பிடிபட்டு அடிபட்டோம் !
இன்று !
அந்த வேதனைகள் !
கொஞ்சம் கொஞ்சமாய் உருவமெடுக்கின்றன !
உட்காயங்கள் உயிர்கேட்கின்றன !
இன்னும் எத்தனை நாட்கள்தான் வாழ்வோ !
என்னைப்போல் எத்தனை ஜீவன்களோ
ந.பரணீதரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.