யார் நீ? - எம்.ஏ.சலாம்

Photo by FLY:D on Unsplash

பாதையில் பெருங்கல் ஒன்று !
விழுந்திருக்கக் கண்டேன் !
அதை அப்புறப்படுத்தியது என் தவறோ? !
கல் என்னைப் பார்த்து !
கனி மொழியில் கூறியது !
யார் நீ? !
எங்கிருந்து வருகிறாய்? !
நீ இந்நாட்டுக்குரியவனாகத் தெரியவில்லையே! !
இந்நகருக்குப் புதியவனா நீ? !
இங்குள்ள பழக்க வழக்கங்களை !
அறிய மாட்டாயா நீ? !
உன் சிந்தனை வேறுபட்டு நிற்கிறதே! !
யார் நீ? !
எங்கிருந்து வருகிறாய்? !
நேற்று ஆவேசமாக வந்த கூட்டத்திலிருந்து !
ஒருவன் என் மீது தடுக்கி விழுந்து விட்டான் !
அவன் தோழர்களின் காலடியிலேயே !
அவன் மிதிபட்டான், உதைபட்டான், !
நசுக்கி எறியப்பட்டான் !
யாருமே அவனை கண்டு கொள்ளவில்லை !
யாருமே அவனுக்கு ஆதரவு தரவில்லை !
ஓடோடி சென்று விட்டார்கள் !
ஆனால் நீ ..... !
தடைபட்ட கல்லை அப்புறப்படுத்துகின்ற நீ ..... !
இல்லை, நீ இந்நகரவாசியே அல்ல! !
எங்கிருந்து வருகிறாய் நீ? !
- எம்.ஏ.சலாம்
எம்.ஏ.சலாம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.