கல்லூரி வந்த புதிதில்!
களங்கமில்லா மனிதர்கள் மத்தியில் - உன்!
சிநேக புன்னகையில் சிநேகிதனானேன் ...!
கிடைத்த தருணங்களில் ...!
பரிமாறிக்கொண்ட தகவல்களில்...!
ஒருவருக்குள் ஒருவர் ஒட்டிக்கொன்டோம்!
ஏதோ ஒரு தருணத்தில்!
ஏதோ ஒரு கணத்தில் ...!
நீ எனக்குள் காதலியாக!
எனக்கே தெரியாமல் மாறிப்போனாய்..!
இத்தனை நாளாக சொல்லாத!
காதலை கல்லூரியின்!
கடைசி நாளிலும் சொல்லாமல்!
செல்லலாம் தான் - ஆனால்!
பின்னாளில் ஒரு நாள் - நீ!
என் முன்னால் வந்து!
அன்றே சொல்லி இருந்தால்!
உன்னை ஆராதித்திருப்பேனே!
என சொன்னால் ....!
தூண்டிலிட்ட புழுவாய்!
துடித்தல்லவா போகுமேன்மனம்!
எனவே தான்!
உன்னை தொலைத்து விடாமலிருக்க!
உனக்குளிருக்கும் காதலையும் யாசிக்கிறேனடி

வீ.இளவழுதி