(பிரிந்தே இருக்கிறேனின் பின்பக்கம்)!
----------------------------------------------------------------------!
!
நான் ஆண்டாளா? - இல்லையே -!
அபகரிக்கும் ஆசை எனக்கில்லையே!
பின் ஏன் கண்ணா -!
என் மனம் உன்னைத் துதிக்கிறது.?!
நான் பாரதியா? - இல்லையே -!
கற்பனைக் கனா எனக்கில்லையே!
நிஜமான உன்னை!
நிழலாக எப்படி சிருஷ்டிப்பது?!
நான் பார்த்தனா? -இல்லையே -!
காண்டீபம் என்னிடம் இல்லையே!
சாரதியாய் நீ வந்தாலும்!
தேரிழுக்க எப்படிச் சொல்வது?!
நான் ராதையா? - இல்லையே -!
குழல் தந்த போதை எனக்கில்லையே!
மயக்கம் இல்லையெனில்!
குழப்பம் ஏன் வந்தது?!
நான் தாசனா? - இல்லையே -!
தாசனாகும் யோகம் எனக்கில்லையே!
தாகம் இல்லையெனில்!
என்னைக் கவிபாட யார் சொன்னது?!
நான் யசோதையா? - இல்லையே -!
தாலாட்டும் யோகம் எனக்கில்லையே!
தாயுணர்வும் இல்லையென்றால்!
ததும்பும் பாசம் ஏன் வென்றது?!
நான் குசேலனா? - இல்லையே -!
கேட்பதும் கொடுப்பதும் என்னிடமில்லையே!
நெருக்கம் இல்லையெனில்!
நட்புணர்வென் நினைவை ஏன் பறித்தது?!
நான் ஆழ்வாரா? - இல்லையே -!
பாடிப் பணிவது நானில்லையே!
பக்தி இல்லையெனில்!
உள்ளம் நெகிழ்ந்தேன் பரவசமானது?!
பாசமா, பக்தியா, நட்பா, காதலா -!
பயமா, பிரேமையா, மதிப்பா, ஆளுமையா?!
கேளவிக் கணைகள் துளைக்கும் போது!
திணறிப் போகிறேன் -!
வார்த்தையின்றி ஓசையின்றி பதில் வரும்போது!
சிலிர்த்துப் போகிறேன்.!
பிரிவென்ற துயர் வரும்போது!
துடித்துப்போகிறேன்.!
பேதை, நான்!
பேதலித்துப் போகிறேன்.!
நவரசக்கலவையாய் நான்!
சிதறுண்டு போகிறேன்.!
பிரித்துப் பார்த்தால் நிறமாலை -!
வ ( எ ) ண்ணங்களை!
இணைத்துப் பார்த்தால்!
ஒளி ஒன்றுதான் !!
ஆளவும் ஆண்டு கொண்டு!
ஆளுமைக்கும் உடபட்ட!
நான் யார்?!
இந்தக் கண்ணாமூச்சியில்!
கண்ணைக் கட்டிவிட்டது யார்?!
கண்ணைக் கட்டிக் கொண்டது யார்?!
நம் கணக்கில்!
ஒன்றும் ஒன்றும் ஒன்றுதான்!
இல்லையா?

கண்ணபிரான்