வெளிப்படையில்லா!
விரோதத்துடன்!
முகம் நோக்க முடியா!
முகங்களுடன்!
நமை கடக்கின்றோம் நாம். !
உன் பிள்ளைக்கு நானும்!
நம் பிள்ளைகளுக்கு நாமும்!
துணையாய் இருந்தது பற்றி!
சிந்திக்க வேண்டாம். !
எனது மனைவியின் பிரசவத்திற்கு!
உனது மனைவியின்!
தாலியை அடகு வைத்து!
உதவியது பழைய கதையாக!
இருந்து விட்டு போகட்டும். !
வெசாக் தோரண மகிழ்வில்!
நம் குழந்தையர் கூடி!
மகிழ வேண்டாம். !
ஹனிபாவின் குழந்தை!
பூச்சூடி அழகு பார்த்ததை!
நாம் கூடியிருந்து மகிழ்ந்ததை!
மீட்டவும் வேண்டாம். !
நத்தாரில் அந்தோணி குடும்பம்!
அளிக்கும் இனிப்பும்இ பரிசும் பற்றி!
முடிந்தால்!
ஓரு காலத்தில்….. என!
பேரர்களுக்கு கதை கூறுவோம். !
நாட்டின் பேரால்!
தேபக்தியின் பேரால்!
இன மதத்தின் பேரால்!
பகிர்வை பகிர்வு செய்து விடுவோம். !
பலகாரமும் பாற்சோறும்!
வட்டிலாப்பமும் கேக்கும் செய்து!
நாம் நாமே தனித்தனியாய்!
சாப்பிட்டுக் கொள்வோம். !
கூட்டு வாழ்வை உடைத்து!
குழந்தைகட்கு கொடுத்திருக்கும்!
விளையாட்டுத் துப்பாக்கிகளை!
மீளப் பெறவேண்டாம். !
விட்டுக் கொடுப்பிலா!
வேலிச் சண்டைகளுக்கு!
வீரர்களை தயார்படுத்த!
வெறும் பழி நமக்கு வேண்டாம். !
வரலாறு நமை!
தண்டிக்கவும் வேண்டாம்!
நமை இழந்த துயரால்!
நமக்குள் இருந்து!
வாழ்ந்து விடவும் வேண்டாம்
வே.தினகரன், பத்தனை