இலையின் பச்சை நிறத்தினிலே!
இறைவனைப் பார்க்கும் கண்வேண்டும்!
தொலைவில் தெரியும் மலையிலவர்!
இருப்பதை வுனர்ந்திட வும்வேண்டும்!
கலைகள் எல்லாம் தெய்வத்தால்!
வந்தவரப் பிரசாதம் எனில்!
சிலைகள் ஓவியம் கவிதையிலே!
உம்மைப் பார்த்திட வும்வேண்டும்!
காற்றில் இரண்டறக்கலந்து அவர்!
இருப்பதை உணர்ந்தால் தென்றலிலே!
தெய்வத்தின் அணைப்பை உணர்ந்திடணும்!
பரவச நிலையை எய்திடணும்!
மலரில் மணமாய் இருக்கின்றாரவர்!!
முகர்வதை தெய்வமென்று உணர்ந்திடணும்!
முகரும் நாசியும் தெய்வமென்றால்!
முழுதும் தெய்வமென்று உணர்ந்திடணும்!
அலையின் ஒலியில் ஆண்டவன்பாடும்!
தாலாட்டினை நாம் கேட்டிடணும்!
அலையை நடனம் செய்யவைத்திடும்!
சக்தியும் அவரென உணர்ந்திடணும்!
இசையின் வடியில் அவன்னிருப்பதை!
உணர்ந்தால் குயிலும் காகமுமே!
இசைக்கும் ஒலியிலும் பரமனைக்கண்டு!
வழிபாடு செய்யும் வரம்வேண்டும்!
எங்கும் எல்லாம் அவர்வடிவேஎனின்!
பேதமில்லா மனம் பெறவேண்டும்!
சொல்லர்க்கரிய குறையா இன்பம்!
எந்நேரமுமே எனக்கு வேண்டும்
எம்.பாலா