மனசாட்சி தொட்டு சொல்கிறேன் என்று!
நெஞ்சைத்தொட்டு சொன்னாய்!அப்ப!
கூட புரிய வில்லை...!
நகமும் சதையுமாக இருந்ததாலோ!
எனை வெட்டி வீசினாயோ...!
பிரிவோம் என்றே தெரிந்த காதல்...உன் காதல்...!
அடி படாது ஆனால் மனசு வலிக்கும்...!
செத்து போவோம்... என்று தெரிந்தே வாழ்கிறோம்!
பிரிவோம் என்று தெரிந்தே காதல்!!
சேர துடிக்கும்... சேர முடியாத சூழ்நிலை...!
சேரவும் பிடிக்காமல்! பிரியவும் முடியாமல்...!
சிக்கி தவிக்கும் நிலை...!
இந்தக்காற்றில்... உன் சுவாசத்தை மட்டும்!
தேடிக்கொண்டிருக்கிறேன்...எனக்கு!
தெரிந்த அடையாளம்...இது மட்டும் தான்...!
ஒரு முறை சுவாசிக்க!!
இன்னும் காத்திருக்கிறேன்! நீ வருவாய் என்றல்ல...!
என்றைக்காவது வருவாய் என...!
-அய்யா புவன்

அய்யா.புவன்