தோற்றது தமிழர்!
என்றா நினைக்கிறாய்!
தன்னை இழந்தது!
விடுதலை போர் என்றா!
நினைக்கிறாய்!
ஓர் ஆயுத வரலாற்றின்!
அகால மரணமிது!
ஆயுதப் போர் தனது!
அகோரத் தோற்றத்தால்!
தனைத்தானே!
புதைத்துக் கொண்டது!
பூக்களுக்குப் பதில்!
ஆயுதங்கள் பறித்து வந்து!
தம் கல்லறைமேல் குவிக்கச்சொல்லி!
அழிந்து போன உயிரின்குரல்!
புதைகுழிகளெங்கும் அதிர்கிறதே !
உனக்கும் கேட்கிறதா? !
உயிர் பறித்த இழப்புகளில்!
முளைவிட்டு நாளையினி!
உயிர் பெற்று வருவோம் நாம் !
உன் வாள் உறைகளுக்குள்!
வார்த்தைகளை கூர்ப்படுத்தி!
எழுந்து வா! !
கொலைக்களத்தின் கத்திகளால்!
உயிர்ப்பலிகள் இனி வேண்டாம் !
வார்த்தைகளால் உரிமை பேசி!
கருத்துகளால் மோதிக்கொள்ளும்!
எம்!
இரண்டாம் யுத்தம்!
இனிமேல்த்தான்
கவிதா. நோர்வே