நீ சூரியனா!
இருந்து கொள்...!
தூரம் என்றாலும்!
உன் கதிர்கள் என்னை!
உரசிக்கொண்டுதானிருக்கும்.!
நான் பூமி.!
நீ பறவையோ!
தூரம் போவாயோ...போவேன்!
நீ நிச்சயம் வருவாய்.!
உன் கூடு என் விரல்களில்.!
நான் மரம்.!
காற்றாக மாறு!
காணாமல் போ.!
ஒவ்வொரு நொடியும்!
என்னுள் நிரப்பிக் கொள்வேன்!
நான் சுவாசம்.!
மேகமாகி நீ!
அலைந்து திரி!
பொழிந்து கொட்டு!
எங்கோ வீழ்ந்து!
எங்கும் பாய்ந்து..!
நீராகி நதியாகி!
உன் இறுதி சங்கமம்!
என்னிடம் தான்!
நான் கடல்.!
பிரிதலும் சுகம்.!
பிரிந்து பின் கூடல்!
தவம்...!
பிரிந்து போ..!
தூரம் போ...!
உன்னால் முடியாது!
இது போர்களம்.!
வெற்றியும் எனக்கு!
தோல்வியும் எனக்கு!
காதலில் மடியில்!
சகலமும் நான்!
உனக்கு.!
- கவிதா. நோர்வே
கவிதா. நோர்வே