01.!
அன்றாடச் செய்தி!
-----------------------------!
பங்குச் சந்தை நிலவரம்!
தங்க விலை விவரம்!
வானிலை அறிக்கை!
இவ்வரிசையில்!
அண்மையில்!
புதிதாகச் சேர்ந்திருக்கிறது!
'தமிழ் மீனவர் மீது!
இலங்கை ராணுவம் தாக்குதல்'!
02.!
டமில்நாடு!
-------------------!
தமிழினத் தலைவரின் (!)!
வேண்டுகோள் ஏற்று!
இனமானத் தமிழர்!
தைத்திங்கள் திருநாளில்!
தம் இல்லத்து வாயில்களின்!
வண்ணக் கோலங்கள் கீழ்!
வரைந்தனர்...!
குறுந்தகவல்களில்!
அனுப்பினர்...!
கைகுலுக்கிப்!
பகிர்ந்தனர்...!
ஹேப்பி பொங்கல் அண்டு!
ஹேப்பி டமில் நியூ இயர்!!
வாழ்த்துகள்

இ.பு.ஞானப்பிரகாசன்