1.செக்குமாடு!
உன் மடியில் தலைசாய்த்த!
என் பௌணமிப்பொழுதுகளை!
இரைமீட்கும்!
செக்குமாடாய்!
திருப்தி கொண்டன!
என் விடியாத இரவுகள்.!
உன் மடியிலிருந்து!
விலக்கி வைத்தாய்!
உன் அருகிருப்பதில்!
திருப்தி கண்டேன்..!
அருகிருந்து எழுந்து போனாய்!
கூரை வேய்ந்த - உன்!
அறையைச் சுற்றி வருவதில்!
ஆறுதல் அடைந்தேன்.!
தேய் நிலவாய்த் தெரிந்த!
எனது நிலவை!
கூரை மறைத்தது!
அறையில் இருந்து!
அகன்று போனாய்!
பழக்கபட்ட!
செக்குமாடு!
இரைமீட்டுக் கொண்டது!
அந்தப் பௌர்ணமி நிலவை.!
நான் வரைந்த வட்டங்கள்!
எனக்குப் பிடித்தே இருந்தது.!
அது நேர்தியானதும்!
என்று அயலவர் கூறினார்.!
சிலர்!
பாதுகாப்பென்று பறைசாற்றினர்.!
பலர்!
செக்குமாட்டுத் தத்துவம்!
பேசினர்!
இன்று!
அமாவாசை!
எங்கும் இருட்டு!
எங்கும் கறுப்பு!
பௌர்ணமி தொலைந்தது.!
ஒளி தேடி உள்ளம் உலர்ந்தது!
எனக்கு நிலவும் மறந்து போனது.!
புதியாய் சில கதிர்கள்!
சுகமான ஊசிகளாய்!
கூரை பிரித்து!
என் உயிர், மெய்!
துளைத்து!
என்னை மீட்டுக்கொண்டது!
செக்குமாடும் கயிறறுத்தது.!
2.திரௌபதை!
உடுத்தல்!
---------------!
புடவை என்று சொல்வார்கள்.!
பண்பாடென்று சொல்வார்கள்.!
மற்றாடைகளை விமர்சிப்பர்.!
இறுக்கமென்பர், இடையென்பர்!
சரிதான்...!
என்னைக்கேட்டால்!
சுடிதார் போட்டிருக்கலாம்!
திரௌபதையும் அன்று!!
வாழ்க்கை!
----------------!
வாழ்க்கையின் வேகத்தில்!
கிள்ளி கிள்ளி சேகரித்த!
வினாடித்துளிகளை சேர்த்தெடுத்துக்!
கோர்த்து எழுதிய கவிதைக்காவே..!
இன்றும் விடிந்தது போல உணர்வேன்.!
!
- கவிதா. நோர்வே
கவிதா. நோர்வே