இந்தக் கணம் போயின் - க.யசோதை (கனடா)

Photo by Tengyart on Unsplash

இந்தக் கணம் போயின் !
பின் அது தோன்றதலு- மரிது. !
எம் உதடுகளும் உடம்பும் கவ் !
வுகிற நொடி போல் !
நான் உன்னிலே தங்கி !
அடங்கி !
கிறங்கி !
உடல் சீற !
உன் சகல அங்கங்களுள்ளும் !
காமுற்று மிதப்பவள் !
எனினும் !
கடந்து போகையில் !
என் ஆன்மாவைக் அடக்கி மாயாதே !
பிரிந்து போகவோ !
உரத்துப் பேசவோ !
அதிகமாய் சிரமப் படாமலே !
கடந்து போகையில் !
இப்போதல்ல எப்போதும் !
உன்னைத் தவிர வேறொருவன் எனக்கு !
நீயாக முடியா. !
என் சிறிய தனங்களை !
பிடித்திருக்கும் உன் பெரும் கரங்கள் !
நெஞ்சச் வட்டுள் !
கட்டிக் கிடக்கும் !
இந்தக் கணங்கள்... !
கீழ்மையையும் நச்சையும் !
நீ உமிழ முன் !
கொஞ்ச நேரம் பொறு. !
உன் இலட்சியங்களின் பொது மேடையில் !
என்னுடைய துயர் !
பேசாதது. !
சிரித்திருக்கும் மண்டபத்துள் !
உன்னால் ஒலியற்ற என் குரலை !
கேட்க முடியுமோ அறியேன். !
உன்னுள் இழைகிற !
இனிமை கரைகிற !
எனினும் !
வரலாறு மறுத்த !
-ஒரே ஒரு முறை !
மூடிய கதவுகளுள், !
இருளுள்- நீ-ர் !
புணர்ந்தெறிந்த !
சேடிப் பெண்டிர் !
கனத்த சீற்றத்துடன் !
என்னிடம் வெளிப்படும் !
அப்போதும் !
நீ என்னை -வெறும்- காமமாய், !
அற்பமாய்- எண்ண முற்படினும் !
நான் உன்னுடையவளேதான் !
க.யசோதை (கனடா)
க.யசோதை (கனடா)

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.