கடுங்கோடை... எதிர் முகம் - கருணாகரன்

Photo by Tengyart on Unsplash

1.கடுங்கோடை !
தேனெடுக்கத் தவிக்கும் ஊரில்!
கோடை விளைந்த வயலிடைக்கண்டேன்!
பசியுமிழும் கண்களோடு!
இரண்டு சிறுவர்களை!
கன்னங்களில்!
இருள்குவிந்த போதிலும்!
நெருப்பாயிருந்த கண்களில்!
தகித்தது!
தீரா வெக்கை!
பெருகிய கோடையை!
மேயும் மாடுகள்!
முலுட்டுப் பூவரசம் மரங்களில்!
எல்லா மகிழ்ச்சியோடும்!
எல்லாத் துக்கத்தோடும் புலுனிகள்!
காற்றள்ளி வந்த கோடையின் குரலை !
வாங்கியதா வெளி!
ஏந்தியதா பனை!
இரைச்சல்!
கோடையின் பேயிரைச்சல்!
வெக்கையில் அனுங்கும்!
வயல்வெளியில் பெருவிசமாய்!
அனல்மேயும் !
அப்பொழுதில் !
வடலிகளில் தாவும் !
அணில்களும்!
அந்தச்சிறுவர்களும்!
வானத்தின் கீழே !
பிரமாண்டமாயினர்!
புலுனிச்சத்தத்தின் பின்னணியில்!
தாமரைக்குளத்தில் இறந்த மனிதனும் !
பூத்த தாமரைகளும் !
தாமப்பா குளிக்கப்போனபோதும்!
தாமரைக்குளம் !
பூத்திருந்தது!
மருத மரநிழலில்!
தண்ணீரும் படு குளிராக இருந்தது!
பகல் முழுதும் !
தாங்கொணாச் சூரியன் !
நெருப்பையவிழ்த்தபோதும்!
தாமரைக்குளத்தில்!
தண்ணீர் குளிராகத்தானிருந்தது.!
தாமப்பாவுக்கும்!
தாமரைக்குளத்துக்கும்!
கோடி சம்மந்தம்!
எந்த ரகசியங்களையும்!
தாமரைக்குளத்திடம் !
மறைத்ததில்லை!
அவர்!
முப்பது வருசமாய்!
காலைக்குளியல்!
மாலை நீராடல்!
கண்ணன் கோயில் தீர்த்தத்தில்!
கரையெல்லாம் தாமரைகள் !
பூக்களும் மொட்டுகளுமாய்!
தாமப்பாவோடு!
ஒரு பின்னேரம்!
தாமப்பா மட்டும்!
தாமரைக்குளத்தில் !
குளம் அவரைக் கொன்று விட்டதா!
தாமப்பா குளத்தில் மூழ்கி இறந்தாரா!
2.எதிர் முகம் நேர் முகம்!
!
தாகத்தின் ஒளியும் நிழலுமாய்!
என்னிடம் வந்தாய் அன்று!
நிழலுமில்லாத !
வெயிலுமில்லாத!
ஒரு பின்னேரம்!
ஒழுங்கையில் நாம் சந்தித்தோம்!
யாருக்கும் தெரியாமல் !
நினைவுகளையும் ரகசியங்களையும் !
எடுத்துவந்திருந்தாய்!
என்னிடமிருக்கவில்லை!
துக்கத்துக்கும் மகிழ்ச்சிக்கு மிடையிலான பாலம்!
நம்பிக்கைக்கும் !
நம்பிக்கையின்மைக்கு மிடையிலான !
தொடுப்புகள்.!
பூவரசம் மரங்கள் காற்றில் அசைந்தன!
தூரத்தில்!
பனைகளின் பின்னே !
நம் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது!
மாலைச் சூரியன்!
நான் இன்னும் சிறுவனா!
இல்லை!
நீதான் இன்னும் சிறுமியாக இருக்கிறாயா!
அல்லது !
இருவருமே சின்னஞ்சிறுசுகளாகத் தானிருக்கிறோமா!
காலம் எங்கே !
மறைந்தது.!
காற்றுக் குதூகலித்து முத்தமிடுகிறது!
பூரசமரங்களை !
நீ தவிக்கிறாய்!
பனைகளின் பின்னே!
வானத்தை நிறம் மாற்றுகிறது!
சூரியன்!
இந்த ஒழுங்கையில்!
மணலின் மேலே !
இரண்டு குருவிகள் தீயில் எரிந்து கொண்டிருந்தன!
அந்த மாலையில்!
தாகத்தின் ஒளியும் நிழலுமாய்!
நீ வந்தாய்!
ஒரு மைம்மற் பின்னேரம் !
என் தலையைச் சீவியெறிந்தது !
எதற்கான பரிசாக!
எதற்கான தண்டனையாக!
- கருணாகரன்
கருணாகரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.