காயங்களிலிருந்து !
வெளியேறிய பறவை!
தன்னுடன் எடுத்துச் செல்கிறது!
தன் அழகிய மலரை!
தன்னுடைய பெருந்தீயை !
தன் கடலை!
தன் வெளியை !
அதனிடமில்லை!
மீண்டும் !
கூடு திரும்பும்!
நினைவின் நிழல்!
அது செல்லும் வழியில்!
தன் சிறகுகளையும்!
கொடுத்துச் செல்கிறது காற்றிடம்!
வலிகளைக்கடந்து போகும் பயணம்!
வெறுமையை !
நிரப்பிவிடுகிறது கூட்டினுள்!
பறவையின் ஆறாச் சூட்டில்!
தவிக்கின்றது கூடு தனியே
கருணாகரன்