என் நினைவலைகள்!
தேய்மானமடைகின்றன !!
நைந்து போன என் உணர்ச்சிகள்!
இன்று நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன !!
எனது வலிகள்!
இப்போது விவாதப் பொருள்கள் !!
மதி பேசும்!
எனது சிந்தனை!
விலக்கப்பட்டது !!
வெறும்!
விதிக்கொள்கை என்று !!
மனதேர் உழவு செய்யும்!
மின்னல் கீற்றாய்!
வசை சொற்கள் !!
என் மௌன மயக்கங்கள்!
களையப் பட்டன !!
கவிதை என்னும்!
காரிகையால் !!
இருந்த போதும்,!
கரைந்து போகும் கனவுகளாய்!
என் கவிதை இன்பம்

க. பழனிவேல், ஜெயங்கொண்ட சோழபுரம்