நான் நினைக்கவில்லை!
ஒரு போதும்!
ஒரு பூனை இத்தனை கவர்ச்சியான தென்றும்!
இவ்வளவு பயங்கரமானதென்றும்!
என் படுக்கையில்!
அதன் உறக்கம்!
பன்னெடுங்கால அமைதியின்!
ஊற்றைப் பிரவாகித்தபடி இருந்தது.!
திகிலூட்டும் படியாக!
பூனையின் உறக்கத்தைக்!
காவல் காத்தவாறு!
ஒரு போர்ப்படையாக!
அதன் நகங்கள்!
வேட்டையின் ருசியையும்!
வெற்றியின் நம்பிக்கையும்!
உறுதிப்படுத்தியபடி!
பூனையின் குரலுக்கும்!
அதன் கண்களுக்கும்!
அதன் நடைக்கும்!
அதன் உறக்கத்துக்கும்!
ஏதேனும் தொட்ர்பிருக்கிறதா?!
கவர்ச்சியாயும்!
மிகப்பயங்கரமாயும்!
பூனை சுழன்று கொண்டிருக்கும்!
நிழலில்!
பூனையின் குரல்!
வன்மத்துக்கும் சினேகத்துமாக!
ஒலிக்கிறது!
அதன்!
உடுருவும் கண்களில்!
இன்னும் தீராதிருக்கிறது!
பசி!
!
-கருணாகரன்

கருணாகரன்