கவிஞர்: நீ “தீ”!
ஐம் பூதங்களில்!
நீ ஒன்று!
நீயில்லையேல்!
நான் இல்லை!
இன்று.!
நீ!
என் காதலி!
ஆம், நீ!
என் காதலி!
உச்சி முதல்!
பாதம் வரை!
சரசமாடி சங்கமிக்கும்!
என்னவளே!
தவமிருந்தே!
பிறந்திருக்க வேண்டும்!
மனிதன்!!
உன் தீண்டலுக்காக!!
கருவானபோது!
கலந்துவிட்ட உன்னை!
உருவாக கொணர்ந்தேன்!
இங்கே!
என் உறவாக.!
உலகத்தின் உயிர்நாடி!
உருவாக்கத்தின் முதல்நாடி!
புயல்!
தென்றல்!
சூறாவளி என ஆடி!
எங்கிருந்து வருகிறாய்!
என் கைகளுக்குள் சிக்காமல்!
என் கண்களுக்கும் காணாமல்!
கொஞ்சி கொஞ்சி பேசும்!
என்னவளே!
வாடையாக வந்து!
நிர்வாண உணர்வுதந்து!
செல்லெலாம் செயலிழக்க!
மீண்டும் செயல்படவே!
அனலாக வந்து!
அருபமாக தந்து!
நடனக்கலைக்கு!
நளினம் சேர்த்து!
மூங்கிலோடு முட்டும் போதும்!
முன் ஜாமத்தில் தொட்ட போதும்!
குழந்தையாக பிறந்து!
இசை குழந்தையாக தவழ்ந்து!
மௌனமாக இருந்த என்னை!
மனம் விட்டு பேசவைத்த!
(சு)வாசமிகு காதலியே!
எப்போதும் கட்டித்தழுவி!
முட்டிமோதி முத்தம் இட்டு!
இதழ் சத்தம் விட்டு செல்லும்!
காதல் பிசாசே!!
தாய் தந்தையை பிரிந்து - இங்கே!
தனிமையிலே துவழும்போது!
அலையாக வந்து!
அலை அலையாக வந்து!
தாய் தந்தையரின் அருகாமையை தந்த!
பிரபஞ்சத்தின் ஊடகமே!
பிரிக்கமுடியா!
என் பெட்டகமே!
திகட்டாத!
உன் தீண்டலலே நீ!
என்னை மறப்பதில்லை!
என்னுள்ளே!
வந்து செல்கிறாய்!
சீராகவே நடக்கின்றன!
ஊடலும் கூடலும்!
நான் உனை நினைப்பதுண்டா?!
நீயின்றி!
இங்கு நான் இல்லை!
நீ கொண்ட காதலை!
சில நொடிபொழுதேனும்!
நிறுத்திவிட்டால்?!
நீயின்றி!
இங்கு நான் இல்லை!
நீரிலே மூழ்கிட ஆசையில்லை எனக்கு!
நெருப்பிலே தீய்திடவும் ஆசையில்லை!
மண்ணிலே புதைந்திடவும் ஆசையில்லை!
வானத்தின் வசபடவும் ஆசையில்லை!
உன்னிலே கலந்திட வேண்டும்!
உன்னிலே கரைந்திட வேண்டும்!
ஆம் காற்றே நீ!
நான் ஆக!
நான் நீ ஆக வேண்டும்.!
கவிஞர்: நீ “தீ”!
தொடர்புக்கு: 006598870725
நீதீ