கடைசி கவிதை - ஜதி

Photo by Seyi Ariyo on Unsplash

நேரம்: மங்கலாகிக் கொண்டிருக்கிறது!
நாள்: நாளைய இதழ்களில், பூக்களின் கசிவுடன் பிரசுரமாகும்!
எந்த நாளைகளும் உறுதியல்ல...!
இதில் நாளை மட்டும் என்ன?!
ஆனால் உறுதியாய் இன்றைக்கு இதுதான் கடைசி கவிதை!
'ஆ' - இரண்டு மாத்திரைகளில் வாயை திறந்து!
'நா' - இரண்டு மாத்திரையில் மொத்தத்தையும் குவித்து!
'நீர்' - இரண்டரை மாத்திரையை குடித்துவிட்டு!
'கனவு' - மூன்று மாத்திரைக்குக் காத்திருக்கிறேன்!
மொத்தம் எத்தனை மாத்திரைகள்? தெரியவில்லை.!
மொத்தத்தில் நடுநிசித் தென்றலே...!
இன்றைக்குப் பின்னிரவில்!
வழக்கமாய் உன்னை வரவேற்கும் விழிகளிரண்டும்!
அநேகமாய் மூடியிருக்கக்கூடும்!
'பழக்கப்பட்ட விழிகள்தானே' - என்றெண்ணி!
சீண்டியெழுப்பப் பார்த்து ஏமாந்துவிடாதே!
நான் ஏமாற்றப் படுவதற்காகவே!
பிறந்திருந்தவன்...!
உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை!
இதன்பின்னும் நீ ஏமாந்து திரும்பிச் சென்றால்...!
நான் முதலும் கடைசியுமாய் ஏமாற்றியது உன்னைத்தான்.!
-ஜதி!
24-11-2005
ஜதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.